பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஞால மொழிகளுக்கெல்லாம் முன் தோன்றிய மூத்த தமிழ். காலந்தொறும் வளர்ந்துவரும் நீர்மைத்தாகும். தமிழின் பழந்தமிழ் சங்கத்தமிழ் என வழங்கும் இடைக்காலத் தமிழ் தேவார மூவராலும், ஆழ்வார்கள் பன்னிருவராலும், மான்னிக்கவாசகராலும் வளம் பெற்றது. ஞாலம் அளந்த மேன்மை தெய்வத் தமிழ்" என்பர் சேக்கிழார் பெருமான். பக்தி மொழி என்று தமிழ்மொழி மேனாட்டு அறிஞர்களால் பாராட்டப் பெறும்.

"முன்னியது முடிக்கும் முருகன் என்னும் முதற்கட்டுரை யும், குன்று தோறாடல்' என்னும் இரண்டாவது கட்டுரை யும் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானைப் பற்றிய செய்தி களைத் தொகுத்துத் தருகின்றது. முத்தித் தலங்கள்' என்னும் மூன்றாவது கட்டுரை திருவாரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, காசி ஆகிய தலங்களின் சிறப்பினைப் புலப்படுத்தி நிற்கின்றது. மூவர் தேவாரத்தில் சில புராண மரபுச் செய்திகள்' என்னும் கட்டுரை தலைப்புக்கேற்பச் செய்திகளைத் தந்து நிற்கிறது. -

"சுந்தரரின் திருத்தலப் பயணம்', 'சுந்தரர் தடுத்தாட் கொள்ளப்பட்ட முறை' ஆகிய ஐந்தாவது ஆறாவது கட்டுரை கள் நம்பியாரூரரைப் பற்றிய வரலாற்றினை ஒருவாறு விளக்கி நிற்கின்றது. ஏழாவது கட்டுரை மாணிக்கவாசகர்’ பற்றியதாகும். திருவாசகத்தில் ஒரு வாசகம் என்னும் எட்டாவது கட்டுரை மணிவாசகரின் பாட்டு நுட்பத்தினைப் பறைசாற்றி நிற்கின்றது! மேன்மைகொள் சைவ நீதி’ எனும் ஒன்பதாவது கட்டுரை சைவ சமயச் சிறப்பினைப் புலப்படுத்தி நிற்கிறது. மக்களை நோக்கிய கொள்கையே சைவ சித்தாந்தம்' எனும் பத்தாவது கட்டுரை கருத்துத் திட்ப நுட்பமுறையில் அமைந்திருக்கக் காணலாம். 'அபிராமி அந்தாதி அம்பிகையின் அருள் ஆகிய இரு கட்டுரைகளும் அன்னையின் அருளை விளக்கி நிற்கின்றன. உமறுப் புலவரும் ஒண்டமிழும், அருட்பா-சீறாப்புராணம்-ஒர் ஒப்புநோக்கு” ஆகிய கட்டுரைகள் இரண்டும் இசுலாம் இலக்கியச் செவ்வியை உணர்த்தும். இந் நூல் தமிழ்த்தாயைச் சமயந் தொறும் நின்றதையலாள் என்று காட்டுவதாக அமைந் துள்ளது. -

-சி.பா.