பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சமய ந்ெ தாறும் நின் றை தயலாள்

திருவாயிலை நோக்கிக் கீழ்வீழ்ந்து வணங்கித் தொழு திறைஞ்சிப் பின் இறைவன் எழுந்தருளிய திருமூலட் டானஞ் சூழ்ந்த திருமாளிகை வாயிலினுட் புக்கு,

புற்றிடங் கொண்ட புராதனனைப்

பூங்கோயின் மேய பிரானை யார்க்கும் பற்றிட மாய பரம்பொருளைப்

பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த

அண்ணலை மண்மிசை வீழ்ந்திறைஞ்சி நற்றமிழ் நாவலர் கோனாய சுந்தரர் உடம்பு எடுத்ததனால் ஆய உண்மைப் பயனை அடைந்தார்.

இவ்வாறு நாயகன் சேவடியெய்தப் பெற்ற இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்று இனிய பண்ணிரம்பியதும் வண்மை பொருந்தியதுமான தேவாரத் திருப்பதிகத்தைத் தமிழ்நாதனாம் சுந்தரன் பாடியபோது இறைவனது திருவருளினால்

தோழமையாக வுனக்கு நம்மைத்

தந்தனம் நாமுன்பு தொண்டு கொண்ட

வேள்வியில் அன்றுநீ கொண்டகோலம்

என்றும் புனைந்துகின் வேட்கைதீர வாழி மண்மேல் விளையாடுவாய்

என்ற குரல் ஆரூரர் கேட்க எழுந்தது. கேட்டலும் வன்றொண்டர் என்னும் கேடிலாதானை இறைஞ்சி நின்று ஆட்கொள வந்த மறையவனே!ஆரூரமர்ந்த அருமணியே: வாட்கயல் கொண்ட கண் மங்கை பங்கா!' என்றெல்லாம் கூவி அழைத்து, நாய் போன்ற தம்மையும் ஒரு பொருளாக