பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சமயந்தொறும் நின்ற தையலாள்

அசைவில்செழுந் தமிழ் வழக்கே

அயல்வழக்கின் துறைவெல்ல

இசைமுழுதும் மெய்யறியும்

இடங்கொள்ளும் நிலைபெருக'

என்று பாடிச் சைவ சமயத்தை வளர்த்தார்கள். இக் காலத்தில் தான் தமிழ் உணர்ச்சியும், சைவ உணர்ச்சியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதபடி மக்கள் வாழ்க்கை அமைந்தது. பல்வேறு கொள்கைகளிலும், சூழ்நிலை களிலும் சிதறுண்டு கிடக்கும் ஒரு நாட்டின் மக்களை அவரவர்கள் பேசும் தாய்மொழியின் வாயிலாகவே ஒன்று படுத்தி கிளர்ந்தெழச் செய்ய முடியும் எனும் மனவியல் உண்மையினை உணர்ந்த சைவ சமயக் குரவர்கள், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பி சைவப் பயிரை நன்கு வளர்த்தனர்.

பல்லவர்கள் காலத்தை அடுத்து அமைந்த பிற்காலச் சோழர் காலத்தில் சைவம் மிக உயர்ந்த நிலையை எப் தியது. நீர் வளமும், நில வளமும் வான் பொய்ப்பினும்

ங் ---- ez

1. In any social group, whatever Its nature and however large it may be, language plays a role of primary importance. It is the strongest of the bonds uniting the members of the group and is at the same time the symbol and safeguard of their common life. What instrument can have greater efficacy than language in affirming the individuality of the group? It is their sign of recognition and their badge of brotherhood.

J. Vendryes.