பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 89

கொள்கையே சைவ சித்தாந்தக்கொள்கை. அதை இலக் கணமாகக் கொண்டு இலக்கியமாக அமைந்த வரலாற்று விளக்கமே பெரிய புராணம்.

"மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை" முன்னாக வணங்கிப் பின்னர் அதனோடு ஒத்த வகையில் ஆலயத்தை வணங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்த பெருமை யுடையதே சைவ சித்தாந்தம். அதனை விளக்கும் சிவஞான போதத்துப் பன்னிரண்டாம் நூற்பா வானது,

"செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம்'கழீஇ அன்பரொடு மரீஇ மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரண் எனத் தொழுமே” என மலர்ந்து நின்றது.

சைவ சித்தாந்தம் என்பது மக்களின் வாழ்வியற்

இலக்கண முறைப்படி எடுத்துக்கூறும் ויומה (ההסJo". கொள்கையேயாகும்.

கோயிலைப் படமாக்கி, மக்களை நடமாடும் கோயில்’ என்று காட்டிய கொள்கையே சைவ சித்தாந்தம்.

படம் என்பது திரை. மனிதனை உண்மைக் கோயி லாகக் கண்டு, உண்மைக் கோயிலை விளக்கும் படம் என்று நின்றதே திருக்கோயில் என்று விளக்கினார் திருமூலர். மக்களையே உண்மைத் திருக்கோயில் என்று காட்டி, அவர்களை படமாக நிறுத்திக் காட்டியதே நாம் இன்று வணங்கும் கோயில் என அமைத்துக் காட்டினார் திருமூலர். அத்துடன் நிற்கவில்லை.

நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று செய்தால் அது படமாடும் கோயில் பகவற்கு ஆகும் என்று கூறினார்.