பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி விடு தூது 66 காக்கை குருவி னங்கள் ஜாதி >> 58 30லர், குயில், தென்றல், நிலவு, மேகம் முதலிய வற்றை யெல்லாம் ஆண்டவன் எதற்காகப் படைத் திருக்கிறான் . தெரியுமா? - காதலர்களுக்கிடையே தூது போவதற்காகத்தான் !” என்று பிரெஞ்சுக் கவிஞனும் - நாவலாசிரியருமான விக்டர் ஹ்யூகோ எங்கோ சொல்லியிருப்பதாக ஞாபகம். ஆனால் விக்டர் ஹ்யூகோ ' அறிந்திருந்த இந்த உண்மையை, அதாவது 'Poetic truth' என்று சொல்லப் படும் கவிதா சத்தியத்தை, நமது தமிழ்ப் புலவர்கள் இரண்டாயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்பே கண்டு விட்டார்கள், சொல்லப் போனால், புலவர் பெருமக்கள் இந்த உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், காதல் ' ' வசப்பட்ட ஆண் - பெண் இருபாலாரும் இந்த உண்மையை எப்போதோ: கண்டு பிடித்து'. 'விட்டார்கள், எனவே காதல் நோய்க்கு ஆளான தலைவன் தலைவியர் தமது ஆற்றாமையையும், மனத்தாங்கலையும் தமது தோழன் தோழியரிடம் கூறினார்கள். அவர்களும் அகப்படாவிட்டால், அவற்றை யெல்லாம் குயிலோடும், மயிலோடும், நிலவோடும்,