பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பதை இலக்கியத் துறையில் பரிசய முள்ளவர்கள் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் சில தூதுக்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் பெயர்கள் மட்டுமே. நமக்குக் கிட்டி யுள்ளன. வெகுசிலவே அச்சு-வாகனத்தில் ஏறிப் பிரபலம் அடைந்துள்ளன; வேறு. சிலவோ அச்சு வாகனத்தில் ஏறும் பாக்கியத்தைப் பெற்றும், ஆதரவில்லாமல் காலப்போக் கில். கவனிப்பாரற்று ஒதுங்கிப் போய்விட்டன; இன்னும் சிலவோ அச்சு வாகனத்தை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பே யில்லாமல், சுவடிகளாகவும் ஏடுகளாகவும் எந்தெந்தப் பரண்களிலோ தூங்குகின்றன; அல்லது கறையானின் பசியைத் தணித்துக் காலாவதி யாகின்றன . ', இத்தகைய தூது நூல்கள் பலவும் தலை சிறந்த இலக் கியங்கள் என்று சொல்லும் அளவுக்கு இலக்கியத்..தரம் பெற்றவை அல்ல என்றாலும், அவை அவற்றின் ஆசிரி பர்களது விந்தையான கற்பனைகளையும் மனோ பாவங்களை யும் தெரிவிப்பதுடன், அவை தோன்றிய காலத்தின் சூழ் நிலையையும் ஓரளவு சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள் ளன என்று சொல்லலாம். முன்னர் சொன்னபடி, தூதுக் குரிய பொருள்கள் எனப் புலவர்.கள் குறித்தவற்றுக்கும் மேலாக, இந்தப் புலவர்கள் பல்வேறு விசித்திரமான பொருள்களை யெல்லாம் தூது விட்டிருக்கிறார்கள். அவற். றில் 1.ண விடு தூது, புகையிலை விடு தூது, துகில் விடு தூது, நெல் விடு தூ து முதலியவை குறிப்பிடத் தக்கன. ஒரு புலவர் பழஞ் சோற்றையே தூது விடுத்ததாகவும் தெரிகிறது. இன்னொரு புலவர் 'செருப்பு விடு தூது' என்ற ஒரு பிரபந்தத்தையே இயற்றியுள்ளதாகக் கேள்விப் படு கிறேன். (அதாவது தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி யைச் சேர்ந்த ஒரு புலவர் சுமார் அறுபது எழுபது ஆண்டு களுக்கு முன்னால் நிகழ்ந்த ஏதோ ஒரு ஜாதீயத் தகராறு காரணமாக, , தமது , எதிர்க் கட்சியாரின் மீது, இந்தச் 'செருப்பு விடு தூதை', ஒரு வசையாகப் பாடினார் என்று "அறிகிறேன். ஆனால் அந்தத் தூதின் பிரதி எனது கைக்