பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 அரங்கேற்றிய காலம் நூலுக்கு மதுரை நீ. இராமலிங்கம் பிள்ளை என்பார் எழுதியுள்ள சிறப்புச் செய்யுளில் வில்லியப்ப பிள்ளை தமது பஞ்சலட்சணத்தை 2899-ம் ஆண்டுக்குச் சரியான தமிழ் ஆண்டு விகாரியில், தை மாதம் 26-ம் தேதியன்று. இரவில் அரங்கேற்றம் செய் தார் (“உலவிய விகாரியில் தை மதி இருபத்தாறு இரவில் ... வில்லியப்பன் திருமுக விலாசமதை வழுத்த...”) என்று குறிப்பிடப் பெறு கின்றது. எனவே தாது வருஷப் பஞ்சத்தைப் பின்னணி யாகக் கொண்ட தமது . நூலை, வில்லியப்பபிள்ளை தாது வருஷம் கழிந்து இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தான்" அரங்கேற்றம் செய்திருக்கிறார். இது தான் சிறப்புப் பாயிரம் தெரிவிக்கும் உண்மை . யோகி சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ள கட்டுரையிலோ கமில்லியப்பபிள்ளை பஞ்சத்தினால் தவிக்கும் மக்களுக்காகப் புரிந்து கொண்டு, சிவகங்கை மன்னரிடம் தூது சென்று , தமது பிரபந்தத்தைப் பாடிக் காட்டி, மக்களுடைய பசிக் கொடுமையைத் தவிர்க்க உதவிய தாக எழுதியுள்ளார். ஆனால் இது நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. ஏ னெனில் பஞ்சத்தில் மக்கள் வாடுகின்ற காலத்தில் வில்லியப்பு பிள்ளை. பஞ்சத்தின் கோரத்திலே நகைச்சுவை காண்பது இயலாத காரியம்; பட்ட கஷ்டத்தை நினைத்துச் சிரிப்பது சுலபமே தவிர, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களைப் பார்த்துச் சிரிப்பது - மனிதப் பண்புக்கே விரோதமானது, மேலும் மக்களுக்காகத் தூது நடந்த ஒரு புலவர் ஏதாவது குட்டிப் பாடலாக எழுதிக்கொண்டு போவது தான் சாத்தியமாயிருந்திருக்குமே தவிர, நீளமான தொரு பிரபந்தத்தை, சுமார் 4600 வரிகள் கொண்ட இலக்கியத்தை எழுதிக் கொண்டு போனார் என்பதும் நம்பக்கூடியதல்ல, எனவே . வில்லியப்ப பிள்ளை. தமது காலை 23 ஆண்டுகளுக்குப் பிறகே எழுதிமுடித்து அரங்