பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம்' நற்து விடக் கூடாது. இயற்கை, செயற்கை-எந்தப் பொருளானாலும், அது !மர்த . வர்க்கத்தோடும் மனித உணர்ச்சிகளோடும் கொள்கின்ற உறவுகள், ஏற்படுத்துகின்ற உணர்ச்சிகள் முதலியவற்றின் மூலமே முக்கியத்துவம் பெறு என் ரன. உதாரணமாக, காதலன் அருகிலிருக்கும்போது தண் (ணென் றிருக்கும் நிலா, காதலன் பிரிந்து சென்றபோது தவிரக் காய்கிறது. ஆனால் உண்மையில் நிலவு நிலவாகத் தான் இருக்கிறது, ஆது. மனித உணர்ச்சியோடு பங்குபெறும் போது தான் கவிப் பொருளாகிறது. எனவே இந்த உறவையும் உணர்ச்சி தகவல் புரிந்து கொள்ளத் திரானி வாய்ந்தவனுக்கு எந்தவொரு பொருளையும் கவிப் பொருளாக்கிவிட முடியும். 'மகாபலி.* "சி) தீதையும், மதுரைக் கோபுரத்தையும் கவிப் பொருளாக்க முடியுமென்றால் மணிமுத்தாறு அணையையும் தெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தையும் கவிப் பொருளாக்க முடியும். இவை எல்லாமே மனிதனின் படைப்புச் சக்தியின் ச'தsெt கள் தானே. பாரதி அதைத்தானே செய்தான். சடங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து !நாடுகளில் புயிர் செய்குவோம்” என்றும், 'காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்', என்றும், வெட்டுக் கனிகள் செய்து , தங்கம் முதலாம் வேறு பல் பொருளும் குடைந்தெடுப்போம்' என்றும் அவன் அன்று பாரத தேசத்தைப் பாடியவைதானே இன்று நமது நாட்டின் விஞ்ஞான வெற்றிகளாகவும், பொருளாதாரத் திட்டங்களா கவும் நம் கண் காட்சி தருகின்றன, அவனைப் போல் நாமும் காண முடியாதா என்ன? "வண்டி அற்புதப் பொருளாம்!- வண்டிமாடும் அற்புதப் பொருளாம்!” என்று கவியுள்ளத்தைப் பற்றித் தேசிக விநாயகம் பிள்ளை பாடவில்லையா? எனவே தான் அவரும்கட, சைக்கிள் - வண்டியைப் பற்றிப் பாடி, சைக்கிள் சக்கரங்களை 'அக்காவும் தங்கையும் போல் அவை போகும் அழகைப்பார்!” ' என்று வியந்து போற்றி, அதிலும் மனித உணர்ச்சியோடு சம்பந்தப்பட்ட கவிதையழகையும் நலத்தையும் வெளிப்படுத்தி விட்டார். எனவே எந்த ஒரு பொருளைப் பற்றியும் கற்பனை நயமும் அழகுணர்ச்சியும்