பக்கம்:சமுதாய வீதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17

பேர்பாதிச் சிரிப்பை அவனுக்காக உள்ளே ரிசர்வ் செய்து கொண்டாற் போன்ற அவர்கள் செயலை அவன் ரசித்தான். அவர்களில் சிலருக்கு உதடுகள் மிகமிக அழகாயிருந்தன, சிலருக்குக் கண்கள் மிகமிக அழகா யிருந்தன. சிலருடைய கைவிரல்கள் மிகவும் நளினமா யிருந்தன, சிலருக்கு முக்கு அழகாயிருந்தது, சிலருக்கு எது அதிக அழகு என்று பிரித்துச் சொல்ல முடியாமல் எல்லாமே அழகாயிருந்தன. .ெ ப ன் க ள் யாரிடம் புன்னகை, கண்களின் பார்வை, பேச்சு, எல்லாவற்றை யும் நேருக்கு நேர் மறைக்க முயல்கிறார்களோ அவனுக் குத் தனியே தர அவர்களிடம் ஏதோ இருக்கிறதென்று தான் அர்த்தம். .

லுங்கி-பனியன் ஆள் மீண்டும் ரிஸ்ப்ஷன் ஹாலில் பிரவேசித்தான். எல்லார் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

2

'மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரை மணி தாமத மாகும்.'

எல்லோருடைய முகமும் அந்தத் தாமதத்தை அங்கீ கரிப்பது போல் மலர்ந்தன.

அடுத்து முன்பு வந்தவனைப் போலவே-கைவி, பனியன், மேலே சமையல் அழுக்குப் படிந்த துண்டுடன்கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு கப்" களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சமையற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது.

காபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசனை கம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/19&oldid=560812" இலிருந்து மீள்விக்கப்பட்டது