பக்கம்:சமுதாய வீதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8 சமுதாய வீதி

'கோபிச்சுக்காதே. சும்மா உன் வாயைக் கிளறிப் பார்த்தேன்-'

முத்துக்குமரன் அவள் முகத்தையும் உயிர்க்களை திகழும் அந்த வனப்பு நிறைந்த விழிகளையுமே இமையா மல் பார்த்தான். அவற்றில் அவள் சத்தியமாகத் தனக்கு அர்ப்பணமாகியிருக்கிறாள் என்ற உணர்வின் சாயலை அவன் கண்டு கொள்ள முடிந்தது. அந்தச் சத்தியமான உணர்வைக் கண்டுபிடித்த பெருமிதத்தோடு அவள் வீட் டில் விருந்துண்ண அமர்ந்தான் அவன்.

15

இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ணி எண்ணிக் கடைசியில் பிரயாண தினமே வந்து விட்டது. பகல் ஒரு மணிக்கு விமானம். சிங்கப் பூர் போகிற ஏர் இந்தியா போயிங்கில் பயணத்துக்கு ஏற் பாடாகியிருந்தது. முதலில் பினாங்கில்தான் நாடகங் கள் நடத்தப்பட வேண்டுமென்று அப்துல்லா கண்டிப் பாகச் சொல்லியிருந்ததனால் சிங்கப்பூரில் இறங்கியதும் உடனே வேறு விமானத்தில் மாறி அவர்கள் மூவரும் பினாங்கு போகவேண்டும். அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்காக அப்துல்லா சிங்கப்பூர் விமான நிலையத்திற்கே வந்திருப்பார். -

பிரயாண தினத்தன்று கோபால் மிகமிக மகிழ்ச்சியா யிருந்தான். மாதவியிடமும், முத்துக்குமரனிடமும் கூட முகத்தைத் துக்கிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பழகி னான். பங்களாவில் வருவோரும், போவோருமாக ஒரே கூட்டம். போர்டிகோவிலும், தோட்டத்திலும் இடம் போதாமல்-தெருவிலும் பார்க்' செய்யப்பட்டிருக்கும் அளவுக்குச் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கார்கள் போக் ரோடே நிறைந்து காணப்பட்டன. -”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/190&oldid=560989" இலிருந்து மீள்விக்கப்பட்டது