பக்கம்:சமுதாய வீதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சமுதாய வீதி

ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த அந்தக் கூட்டத் தில், தான் தனியே விடப் பட்டிருக்கிறோம்-என்று. முத்துக்குமரன் எண்ணாதபடி அவனருகே இருக்க வேண் டிய கடமை தனக்கு இருப்பதை மாதவி உணர்ந்தாள். அவனுடைய இதயம் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. தான் அப்படி முத்துக்குமரனின் அருகிலேயே ஒட்டிக் கொண்டு நிற்பதைக் கோபால் வித்தியாசமாக எடுத்துக் கொள்வானோ என்ற பயம் இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

'கஸ்டம்ஸ் சடங்குகள் முடிந்து அப்பாலிருந்த வெளி நாட்டுப் பிரயாணிகளுக்கான லவுஞ்சில் அமர்ந்திருந்த போது, 'நீ நாடகத்தின் கதாநாயகி, கோபால் நாடகத் தின் கதாநாயகன், மூன்றாவதாக நான் எதற்கு இப்போது சிங்கப்பூர் வருகிறேன் என்பதுதான் எனக்கே புரிய வில்லை' என்று மீண்டும் அவளிடம் வம்புக்கு இழுத்தான் முத்துக்குமரன்.

மாதவி முதலில் ஒரிரு விநாடிகள் இதற்கு மறுமொழி கூறவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டாள். சில விநாடிகள் கழித்து அவன் காதருகே மெதுவான குர லில் அவள் கூறினாள்: கோபால் நாடகத்துக்குக் கதாநா யகர். கதாநாயகிக்குக் கதாநாயகர் நீங்கள்தான்!' அவன் முகத்திலும் இதைக் கேட்டுச் சிரிப்பு மலர்ந்தது. கோபா லும் அருகே வந்து அதில் கலந்து கொண்டான்.

"என்ன வாத்தியாரிட்ட இரகசியமா ஜோக் அடிக் கிறே...'

"ஒண்ணுமில்லே! சாருக்கு இதுதான் முதல் விமானப்

பயணமாம்...'

"மெய்டன் ஃப்ளைட் இல்லையா? கோபால் அள

வுக்கு மீறிய பிரயாண உற்சாகத்திலிருந்துதான். திடீரென்று அவர்களிடம் வந்து, "ஜமாய்ச்சுப்பிடணும், இத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/192&oldid=560991" இலிருந்து மீள்விக்கப்பட்டது