பக்கம்:சமுதாய வீதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி, 57

கென்று பேசும்போது அழகாயிருந்தாள். நாணித் தலை குனியும் போதும் அழகாயிருந்தாள். பாடும்போதும் அழ. காயிருந்தாள். மெளனமாய்பிருக்கும்போதும் அழகாயிருந் தாள். - - '.

இன்னிக்கு நீங்க ரொம்ப நல்லாப் பேசினீங்கஎன்று அவளும் அவனைப் புகழத் தொடங்கியபோது, "என்னிக்குமே நான் பேசறது நல்லாத்தான் இருக்கும் - என்று அகங்காரத்தோடு பதில் சொன்னான். அவள் குறுக் கிட்டாள்:

'நான் கேக்கறது இன்னிக்குத்தானே?" -

வேணும்னா இனிமே-நீ கேக்கறப்புல்லாம் பேச றேன் போதுமா?’’

அவள் சிரித்தாள். மின்னும் அந்தப் பல் வரிசையின் நிறத்திலும், மெருகிலும் அவன் வசமிழந்து கிறங்கினான். இப்படிப்பட்ட, பெண்ணழகை இதற்குமுன் காவியங்க எளின் வர்ணனைகளில்தான் அவ்ன் கண்டிருக்கிறான். கோபால் அவனருகே வந்தான். -

'நாடகம் இனிமே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி தான்..." -

"ஏன்? அதெப்படி இப்பவே நீ சொல்ல முடியும்.' 'வந்தவங்க சொல்றாங்க். நானா சொல்றேன்?"

அதெப்படி?’’

ஆளைப் பிடிச்சுப் போயிட்டா...அப்புறம் எல்லாமே நல்லாருக்கும்பாங்க. ஆளைப் பிடிக்கலியோ நல்லாயிருக் கிறதைக்கூட மோசம்பாங்க...அதுதான் இந்த ஊர் வழக் கம் வாத்தியாரே...' என்றான் கோபால். முத்துக்குமர னுக்கு அந்த வழக்கம் வேடிக்கையாகவும், விநோதம்ாக வும் தோன்றியது. ஆனாலும் அவன் அது விஷயமாகக் கோபாலிடம் எதிர் வாதிடுவதற்கு விரும்பவில்லை. அன்று மாலையில் ஆறரை மணிக்குக் கோபால் முத்துக்குமரனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/59&oldid=560852" இலிருந்து மீள்விக்கப்பட்டது