பக்கம்:சமுதாய வீதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 71

நாடகக் கம்பெனியிலே மாசச் சம்பளத்துக்கு 'ஆர்ட் டிஸ்டா ஒப்பந்தம் பண்ணிக் கையெழுத்துப் போட்டவ. ஸ்டேட்டஸ் பிரச்னையெல்லாம் வேற இருக்கு. அவ ருக்குத் தெரிஞ்சா உங்களையேகூடப் போக வேண்டாம்' பாரு'

'அதுக்கு வேறே ஆள் பார்க்கணும். ஒருத்தன் சொல்லித் தலைவணங்கற ஆளு இல்லே நான். இந்த போக்ரோடு கோடீயிலே இருக்கே டீக்கடை, அதுக்கு வான்னு நீ என்னையெக் கூப்பிட்டினாக்கூட உங்கூட குசாலாக் கை கோத்துக்கிட்டு வர நான் தயாராயிருக் கேன் மாதவி.

அவள் முகத்தில் நன்றியும் அன்பும் கனிவும் புன்முறு வல் தோன்றியது. -- -

நான் கண்டிப்பாச் சாப்பிட வரேன். உன் நிபந் தனையை ஏத்துக்கறேன். இப்பவே உங்க அம்மைக்கு

ஃபோன் பண்ணிச் சொல்லு...'

'இருங்க! முதல்லே நாயர்ப் பையனைக் கூப்பிட்டு வெளியே புறப்படறதுக்குக் காரை எடுக்கச் சொல் றேன்...' -

வேண்டாம் மாதவி! கோபாலோட கார்ல போக

வேண்டாம்! டாக்ஸியிலே போவம். அல்லது பஸ்ல்ே போவம்...'

சே! சே! அவ்வளவு வித்தியாசமாகப் போனா

அப்புறம் அவருக்குக் கோபம் வரும். கார் எடுத்துக் கிட்டுப் போறதை அவர் தப்பா நினைக்க மாட்டாரு. "எங்க போகணும்னாலும் டிரைவரிட்டச் சொல்லி சின்ன வண்டியிலே அழைச்சிட்டுப் போன்னு போறப்பக்கூட அவரு என்கிட்டச் சொன்னாரு...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/73&oldid=560866" இலிருந்து மீள்விக்கப்பட்டது