பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 முகடுகளிலும் அடிவாரங்களிலும்

இப்படி, அனர்த்த வாழ்வு நடத்தும் இந்த மக்கள், என் மனத்தைப் பெரிதும் பாதித்த தருணத்தில் ஒரு பிரபல பத்திரிகை, என்னிடம் ஒரு சிறு தொடர்கதை கேட்டது. உடனே வேண்டும் என்றார்கள். இந்த மக்களையே மையமாக வைத்து எழுதியனுப்பினேன். இதற்கிடையே அந்த பிரபல பத்திரிகை, செக்ஸ் எழுத்தாளர்களுக்கு ஒரு மரியாதை எனக்கு இன்னொரு மரியாதை வைத்திருப்பதாக அறிந்து, அந்த பத்திரிகை ஆசிரியருக்கு அதைக் கண்டித்து, கடிதம் எழுதிப்போட்டேன். இரண்டு மாதம் கழிந்து கதை திரும்பி வந்தது, கனமான கதையாம். பிரசுரிக்க இயலாதாம். தினமணிக்கதிரின் ஆசிரியரான திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் என்னிடம், தனது உதவி ஆசிரியரை அனுப்பி தொடர்கதை கேட்டார். இந்தக் கதையைக் கொடுத்தேன். பிரசுரமாயிற்று.

‘கதையே இல்லாமல், கல்வராயன் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து விளங்கும் இந்த திரில் இல்லாத கதையை பிரசுரித்த நா.பா. வுக்கு, நான் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால், இந்தக் கதைக்கு வரையப்பட்ட சித்திரங்கள், பிரச்சினையையே கொச்சைப்படுத்தியதோடு, அசிங்கப்படுத்தி விட்டன. மலைப்பெண்கள் சாக்கெட் போடமாட்டார்கள் என்று, யார் சொன்னார்களோ, பிரதான பெண் கதாபாத்திரத்தை ‘ஏ’ பெண்ண்ாக வரைந்தது மட்டுமல்ல, ஒரு ஆடவனை, கையுங் காலுமாய் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் நிகழ்ச்சியை வரையாமல், கட்டப்பட்டிருக்கும் தம்பியைப் பார்க்க வரும் வெள்ளச்சியை ஒருவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதை செக்ஸியாக வரைந்து, எந்த வியாபாரத்திற்கு மனச்சாட்சி இருந்தாலும் சதை வியாபாரத்திற்கு இருந்தாலும், கதை வியாபாரத்திற்கு கிடையாது என்பதை நிரூபித்து விட்டார்கள். எழுதியது பிரசுரானபோது ஏண்டா எழுதினோம் என்ற குறை, இந்த கட்டுரை எழுதும் இந்தத் தருணத்தில்தான் ஒரளவு போயிருக்கிறது.

இந்தத் தொடர்கதை, அரசு யந்திரத்தின் அசமந்தப் போக்கை, பெரிதும் சித்தரிக்கிறது. ஆனாலும் இதுமாவட்ட மட்டத்திலோ, நமது செகர ட்டேரிய ட் மட்டத்திலோ, யாருடைய மனச்சாட்சியையும் உசுப்பவில்லை. சம்பந்தப்பட்ட இலாகா நண்பர்களிடம் சொன்னால் அப்படியா... எப்போ எழுதினிங்க’ என்று என்னையே, சினிமா எழுத்தாளர் மாதிரி கதை சொல்லச் சொல்கிறார்கள். இவ்வளவுக்கும் இத்தகைய செய்திகளைச் சேகரிக்க ஒரு தனி இலாகா வேறு இருக்கிறது. இந்த மக்களின் பிரச்னைகளைப் பற்றித் தப்பாகவோ அல்லது சரியாகவோ எழுதப்பட்ட ஒரு படைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இந்த மக்களைப் பற்றி எப்போது தெரியப் போகிறார்கள்?