பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


“இன்னம் அறத்தா றிசைக்கின்றேம். நீரேன் வாளா இறக்கின்றீர்?
அன்னையனையான் எம்மிறைவன் அவனுக்காளாய் உய்ம்மின்கள்”

என்ன "ஏட சிறியாய் ! நீ எவ்வாறெங்கட் கடாத மொழி சொன்னது" என மானமுளார் கழுவிலேறத் தொடங்கினர்.

மதத்தினின் மானமிக்கார் தாங்களே வலிய ஏறிப்
பதைத்திட இருந்தார். ஏனைப் பறிதலையரைச் சைவ
விதத்தினா லொழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச்
சிதைத் திடர் செய் தேற்றிட்டார் திரிதலைக் கழுக்கோல் தன்னில்.


வழி வழி வருமாணாக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம்
அழிபவர் திருநீறிட்டார் அது கிட்டாதயர்வர் ஆவின்
இழிவில் கோமயத்தை அள்ளிப் பூசினார். இதுவுங் கிட்டா
தொழிபவர் ஆவின் கன்றைத் தோளிலிட்டுயிரைப் பெற்றார்.


கூறிட்ட மூன்றுங் கிட்டாதயர்பவர் குற்றந்தீர
நீறிட்டார் நெற்றியோடு நீருடை கோமயத்தின்
சேறிட்டார் நெற்றியோடு நெற்றியைச் செறியத் தாக்கி
மாறிட்ட பாசந்தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார்.


மற்றிவர் தம்மை யூற்றம் செய்திலர் மடிந்தோர் யாரும்
சுற்றிய சேனங்காக நரிகள் நாய் தொடர்ந்து கௌவிப்
பற்றி நின்றீர்த்துத் தின்னக் கிடந்தனர்.


ஈதே பரஞ்சோதியார் கண்ட கதை.

இக்கதைகள் ஒன்றோடொன்று முரண்பட்டு நிற்கின்றன. வெப்பு ஒழித்தல், தீயிலேடிடல், நீரிலேடிடல் என்ற மூன்றையும் ஒன்றாகவைத்து எண்ணி, இவ்வழக்குகளாட இறைவனருளை வேண்டி நின்றதாகப் பெரிய புராணம் பாடு-