பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

________________


முன் ஏற்பாடாக அமைத்து வைத்தார். "புனல் வழக்கில் தோற்றால் கழுவேற வேண்டும்" எனச் சம்பந்தரே வேண்டினார். அவர்கள் அதற்கு உடன் பட்டதும் குலச்சிறையார் அக்கழுமரங்களைச் சமணர்கள் முன்னாகக் கொணர்ந்து நிரல்பட நிறைத்து வைத்தார். மன்னவன் அமணர்களை ஒறுத்தற்கு ஒருப்பட்டான் என அறிந்து முன்னைய மகிழ்ச்சியினும் பெரிதும் மகிழ்ந்து திகழ்ந்தாராம் சம்பந்தர். பின்னர்த் தொண்டர்கள் கொலை பழுத்த நெஞ்சினராய் அமணர்களை ஈர்த்து ஈர்த்துக் கழுவிடை நிரைத்தனராம். இக்கதையில் சம்பந்தர் முதலியோரது கொலைச் சூழ்ச்சியே நன்கு விளங்குகின்றது. பரஞ்சோதி முனிவரோ கழுவேற்றும் எண்ணம் சிவபெருமானுக்கே முதன் முதல் தோன்றியதாகப் பாடுகின்றார். “வாதுசெயத் திருவுள்ளமே” என்று விடை கேட்டபோது சமணர் "கழுவேறுவர்" என்று ஆண்டவன் உறுதிகூறி விடை கொடுத்தனராம். மானமுள்ள அமணர் கழுவேறினர். ஈர்த்து ஈர்த்துக் கழுவேற்றிய சைவரைப் பழிப்பது போல அவர்களை "வேடத்தார்" எனப் பரஞ்சோதியார் தம்மையறியாது புனைந்- துரைத்தல் காண்க.

இக்கதையின்படி தமது கொள்கைக்காக உயிர் துறந்த சமணர்களே பெரியோராகின்றனர். கழுவேறியதைப் பல படியாகப் புனைந்து உரைக்கின்றனர், இரு திருவிளையாடற் புராணமுடையாரும். ஆனால் சேக்கிழாரோ, கொலைக்

7