பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


என்றும், மகாவீர‍ர் என்றும், கண்ணன் என்றும், சம்பந்தர் என்றும், அப்பர் என்றும், சங்கர‍ர் என்றும், இராமானுசர் என்றும தோன்றி ஒளியாற்றலினால் அம்மலையை இடித்துடைத்து, அப்பேராற்றிற்கு வழி செய்தமைக்கின்றது. பழைமை போல, அந்த ஆறு பெருக்கெடுத்துத் தூயதாய் விரைந்தோடிப் பார்முழுதும் பரவுகின்றது.

ΙΙ

அழகு வழிபாடே அவ்வாற்றின் அருள்நீர் எனக்கண்டோம். தமிழர் தமது கடவுளுக்கு அழகு என்றே பெயரிட்டனர். முருகு என்பதே தமிழ்க் கடவுள். அழகு, உடற்கட்டு, இன்பம், இளமை, அழியாமை, நறு நாற்றம், இனிப்பு என்பன அச்சொல்லால் குறிக்கப்படுகின்றன. அழகென்பது கட்புலனமைதி ஒன்றேயன்று. ஐம்புலனும், ஆறறிவும் ஆரத்துய்க்கும் ஓர் அன்பின் மென்மையும், இன்ப நுட்பமுமே அழகாம். தேனிலும், மலரிலும், உடலழகிலும், வன்மையிலும், அழியாப் பொருளிலும் தமிழர் ஆண்டவனைக் கண்டனர். ஐம்புலனும் ஆரத்துய்க்கும் இன்ப ஊற்றினை அவர் எங்கு எங்குக் கண்டனரோ, அங்கெல்லாம் ஆண்டவனைத் தொழுது வணங்கினர். அப்பொருள் மாறினும், மறையினும், அவ்வின்பம் நிலையாய் நிற்கும் என்று கொண்டு, அதனை அழியா இளமையாம் கந்தழி எனப்போற்றினர்; அக்கந்தழி நிலையை நாடினர். மலையானது, மாலைக்