பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


வாய்வழக்காடுவதோடு நின்று விடுவதே நம் நாட்டவர் இயல்பு. மேனாட்டவரோ கொள்கை வேறுபடுவது ஒன்று பற்றியே பலரைத் தீக்கு இரை ஆக்கினர். அவர்கள் வாயாடாது கையாடுவர். கதிரவன் கோள்களின் நடுவே இருக்கின்றான். உலகமே அவனைச் சுற்றி வருகிறது என்ற பெரியானைச் சிறையிலிட்டனர் மேனாட்டார். ஆனால், கடவுள் இல்லை என்ற சாங்கியம் பூர்வமீமாம்சே முதலிய நூல்களையும் கடவுள் உண்டென்பவர் பலரும் ஓதுகின்றனர், நமது நாட்டில். ஆனால், நம்மவர் கொலைகஞ்சி நடுங்கினாலும், வாயாரக் கொலைக் கதை சொல்ல அஞ்சுவதில்லை. இராமானுசர் சமணரை வாட்டினார் என்றும், சமணர்கள் இராமானுசை வாட்டினார்கள் என்றும் கதை கட்டிவிட்டனர். இத்தகைய கதைகட்கு எண் இல்லை. ஒட்டக்கூத்தர் புலவர் தலையை வெட்டும் கதையை என் என்பது? இவை அனைத்தும் பகற்கனவு என்று அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். சம்பந்தர் சமணரைக் கழுவேற்றிய கதையும் ஒரு கனாக் கதையே என்க. கழுவேறுவதை முன்னரே கனாவாகச் சமணர் கண்டனர் எனப் புராணங்கள் அனைத்தும் கூறவில்லையா!

எண்ணாயிரவரைக் கழுவேற்றுவது அந்நாளில் இயலுவதொன்றோ என ஆராய்க. ஆலவாயில் எத்துணை மக்கள் வாழ்ந்திருப்பர்? அந்நாளில் மக்கள் தொகை இப்போது இருப்பதை விட