பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

________________


யே உள் அடங்கிக் கிடக்கிறது. கிணற்றை வெட்டினால் நீர் புலப்படத் தோன்றுவதுபோலக் காரணத்தில் உள் அடங்கிக் கிடப்பது, பின், முயற்சியால் வெளிப்பட்டுத் தோன்றும். பொன்னில் அணிகள் உள்அடங்கிக் கிடக்கின்றன. ஆனால், பொற்கொல்லனின் முயற்சியால் வெளிவருகின்றன. பொன்னில் துணி உள் அடங்கிக் கிடவாமையால், என்ன முயன்றாலும் துணி பொன்னின் காரியமாக வெளிவருகிறதில்லை. துணியாகிய காரியம் நூலாகிய காரணத்தில்தான் உள் அடங்கிக் கிடக்கிறது. இவ்வாறு "காரியம் என்றும் உள்ளது-சத்தானது" என்று கொள்வோர் சத்காரிய வாதிகள். இவ்வாறு “காரியம் காரணத்தில் முன்னரே உள்ளது அன்று” என்று கொள்வோர் அசத்காரிய வாதிகள். சமணர்கள் "இரண்டும் உண்மை அன்று; ஆனால் இரண்டிலும் உண்மை உண்டு" என்று கொள்கின்றனர். உண்மைத் தன்மையாம் இயல்பு வகையால் நோக்கும்பொழுது காரியம் காரணத்தில் அடங்கிக் கிடக்கின்ற சத்தேயாம். ஆனால், வகையாம் இருப்பு நிலையைக் காணும்போது, அது காரியத்தில் அடங்கிக் கிடவாத அசத்தேயாம். பல அணிகளையும் காரியங்களாகக் காண்கிறோம். பொன் என்ற இயல்பினை நோக்கும்போது அணிகளான காரியங்கள் அக்காரணத்திலே அடங்கிக் கிடத்தலின், சத்தேயாம். ஆழி என்றும், வளை என்றும், மாலை என்றும் வரும் பல பல அணி வகைகளின் இருப்பு நிலைகளை நோக்கும்போது, அவை பொன்னில்