பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

________________


தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

என்று பாடினார் என்பர் சமணர். ஊன் உண்டு பழகியவர்களுக்காக இவ்வாறு பௌத்தர்கள் இரண்டாந்தரமாகக் கூறினார்களே அன்றி, ஊன் உண்ண வேண்டும் என்று பௌத்தர்கள் வற்புறுத்தியவர்கள் அல்லர். மணிமேகலையில் சாதுவன் நக்கசாரணர்களைத் திருத்திய கதையினைக் கூறும் பகுதி இதனை வற்புறுத்தும். எனினும், புத்தர்களோடு வாதிட்ட சமணர்கள், புத்தர்கள் ஊனுண்ண விரும்புதலையும் பள்ளியருகாகக் கழிமீன்கள் கவருதலையும் சுட்டிக் காட்டுகிறார்கள். பெளத்தர் வாழும் இடத்தை "செம்படர்கள் இறைவன் உறையும் இடம்" (464) என்றும், "கயன் மீனிரியக் கழிநீர் வரியும் வயன் மாண் புடைய வளமைத்து" (467) என்றும் நீலகேசி கூறுவது காண்க. ஞானசம்பந்தர் மூன்றிடங்களில் கழிமீன் கவருவதனைக் குறிப்பிடுகின்றார்.

“கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்.
இடுக்கணுய்ப்பாரல ரெய்த வொண்ணா இடமென்பரால்” (2712)

இங்கே கழிமீன் கவர்வதைப் புத்தரைத் குறிப்பதாகவும் பிற சமணரைக் குறிப்பதாகவும் கொள்ளுதல் கூடும். கடுக்கள் தின்பதை அமணருக்கு ஆக்கவேண்டும் போலும்.

“கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங்
கசிவொன்றில்லாப் பிட்டர்தம் மறவுரை” (3786)