பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

________________


விளைவிக்கும் பேய்க்கோலத்தார் என்று பொருள் கூறுகிறது, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி (Tamil Lexicon). ஆச்சியர் என்பது ஆசீவகர் என்பதன் மரூஉவும் ஆகலாம்.

"ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணுமின்கள் (1291)

என்ற பாட்டில் எதுகையை நோக்குதல் வேண்டும். இரண்டாவது அடியில் நான்காவது எழுத்து வகரமாக வருதலின் முதல் அடியிலும் நான்காவது எழுத்து வகரமாகக் கொள்ளுதல் கூடும். ஆசிவகர் என்பதில் இடையில் வரும் சகரம் இப்போதுபோல் அன்றி, முன்காலத்தில். இப்போது இரட்டித்த சகரம் போலவே, ஒலித்து வந்தது என்று எண்ண இடம் உண்டு. அப்படியானால், இடையில் சகரம் விரித்தல் விகாரமாய் வருதற்கும் இடம் உண்டு. ஆச்சாரியர் என்பது முதலிய இடங்களிலும் சகரம் இரட்டித்தல் காண்க. சம்பந்தர் பாடுகிற இந்தப் பாட்டின் சந்தத்தில் முதற்சீரும் இரண்டாம் சீரும் பெரும்பான்மையும் காய்ச்சீராக வருவதால் "ஆச்சிவகப் பேய்களோடு" என இருந்திருப்பினும் சீர்கெடாதாம். இவ்வாறானால் ஆசீவகர்களைச் சம்பந்தர் குறிக்கின்றார் எனலாம். பல்சமண் (43) என்று சமணரைப் பல கூறுபடுத்துக் கூறுவதால் அம்மணமாய்த் திரிவார் என்ற பொருளில் ஆசீவகர்களும் அவர்களில் ஒருவராய் அமணராதல் காண்க.