பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


“மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுத்தே
ஆதிஅருண் மறைவழக்கம் அருகிஅர னடியார்பால்
பூதிசாதன விளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு
ஏதமில்சீர் சிவபாத இருதயர்தாம் இடர்உழந்தார்.”


“மனையறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம்
நினைவுறுமுன் பரசமய நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார்.”

(திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் புராணம் 18, 19) எனவரும் பெரிய புராணப் பாடல்களைக் காண்க.

சமணரை அழிக்கவே இறைவன் அருள் வழியே பிறந்தாரானால், சமணர் இன்றைக்கும் நிலைநின்று விளங்குவது எதனாலே? அன்றியும் அப்பெரியார் தாம் எதுபற்றி இவ்வுலகத்தில் தோன்றினாரோ அதனை முடிக்கவில்லை என முடியும். அவ்வாறன்று; சம்பந்தர் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவரேயாவர். செயற்கரிய செய்த இப்பெரியாரது திருப்பணிதான் என்ன?

சமணக் கொள்கையும், நாம்முன்னர்க் காட்டியபடி தமிழர் கொள்கையேயாம். அத்தமிழ் வயலில் களைகள் மூடிக்கொண்டன; பைந்தமிழ்ப் பயிர் வாடத் தொடங்கிற்று. அந்நிலையில் அக் களைகளை நீக்கிப் பண்டைப் பைந்தமிழ்ப் பயிரைச் செழித்து வளரச் செய்யவே சம்பந்தர் தோன்றினார். களை கட்டித்