பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


யிலாது திரிந்த திகம்பர‍ர் என்ற இருவகையினரில், பின்னவரையே இகழ்ந்துரைக்கின்றார். இவர்கள் துறவு கடுந்துறவு; பேய்துறவு. இவர்களிடையும் கூடா ஒழுக்கத்தையே பழிக்கின்றார். ஒருவகையால் நோக்குமிடத்துச் சமணரது துறவினைமட்டும் இவர் கடிகின்றார் இல்லை. எவரிடத்துக் காணப்படுவதாயினும் புறத்துறவாம் கடுந்துறவினையே கடிந்து பேசுகின்றார். இவ்வாறு உடையின்றி உலவி உடலை வாட்டியவர்கள், சமணர்களிடை மட்டுமா விளங்கினார்கள்? பண்டை நாள் கதையைப் படிப்போமானால், பாலா கார்கி என்ற இளம்பெண் கடுந்துறவியாய்ச் சன்கனது அரசு மன்றத்தில் நின்று மறை முடிவினை (உபநிஷத்) விளக்கியமையும், அவ்வம்மையார் உடையின்றி நிற்பதைக் கண்ட மற்றை முனிவர்கள், நாணத்தால் தலைகுனிந்து நின்றமையும் அறிவோம். மற்றும் பலர் உடையின்றித் திரிந்தமையும் நமக்கு விளங்கும். பழைய நாளில் அந்நிலை தீமை பயவாது சிறந்திருக்கலாம். எல்லோரும், உடையணிந்து, உடலை மூடி வாழ்கையில், ஒருசிலர் உடையின்றித் திரிவது ஒழுக்க நிலையைக் குலையச் செய்யும். மலையாளத்தில், பெண்கள் மேலுடையின்றித் தெருவே திரியும்போது, அதனைக்கண்டு பழகிய மக்கள் மனஞ் சிதறுவதில்லை. ஆனால், பிறநாட்டான் ஒருவன், அங்குச் சென்றால், அவன் மனம் கலங்குகின்றதன்றோழ அவ்வாறே, உடையின்றித் துறவிகள் எனச் சிலர் மட்டுமே பெண்கள் எதிரே, வெளிவந்தால்,