பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


என வருதல் காண்க. நகைச் சுவை ததும்ப, இன்னோரை "நீரையும் வெறுத்துத் துறவு பூண்டோர்" எனப் புனைந்துரைக்கின்றார் சம்பந்தர்.

அலையார் புனலை நீத்தவரும்.

என வரும் பாட்டின் நயம் பாராட்டற்பாலதாம். ஒருநாள் குளியாமற் போனால் வீச்ச நாற்றம் வீசும் நம்முடலம், நீர்த்துளியும் மேல் தெறியாதவாறு, நீர்த் துறவு பூண்டால் என்ன நிலையில் புழுங்கும்? இதனினும் எரிவாய் நிரயம் என்பது வேறொன்றுண்டோ?


IV

அம்மட்டோ! சிலர் கடுந்துறவு இருந்தபடி? தம்முடலை ஒறுக்கும் வகையால் எல்லாம் ஒறுக்கினர். வேர்வை அரும்பாதபடி ஓரிடத்தே குந்தி இருந்தாராயின், இவர்களை ஒருவரும் பழித்திரார். "வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவார்" என முன்னரே அவர்கள் நோன்பினைப் புனைந்துரைத்தமை கண்டோம். உடலைப் பொரித்தெடுக்கும் வெயிலில், புற்றின் மேலேறி மீன் உணங்குவது போல, உணங்கிக் காய்ந்தனர்; உடலெல்லாம் வேர்வை சிந்த நின்றனர்; காலெலாம் குடையும் வரை நின்றபடியே நின்று உடலை வாட்டினர். அழுக்கு மெய் கொண்ட ஊத்தை வாய்க் கொதுகறாக் கண்ணி கள். ஒரு நாள் போலப் பல நாளும் கால் வீங்க வேர்த்துடல் விரிய வெயிலில் நின்றால், அவர்களது உடல் நாற்றத்தைப் பிணநாற்றம் என்று