பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


மூழ்க வேண்டும்; ஈதே வீட்டு நெறி எனச் சொல்லித் திரிந்து அறங்களாம் உண்மைகளை மறந்தமை போல வேறு சிலர்களும் அந்நாளில் வழியையே முடிவென எண்ணி மயங்கினர். எல்லாம் துறந்து போகின்ற வழியில், வேண்டிய பொருள் தரவோ, தம் செலவுக்குத் துணையாகவோ இவற்றைக் கொண்டு செல்கின்றார்கள் என நகையாடுகின்றார் சம்பந்தர்.

இயல் வழி தர இது செலவுற இனமயிலிறகுறு தழையொடு,
செயல் மருவிய கடமுறியடை கையர்

எனப் பாடுகின்றார்.

பிச்சக்குடை நீழற் சமண்—
தாறிடு பெண்ணைத் தட்டுடையார்—
தட்டிட்டே முட்டிக் கைதடுக்கி நின்றுண்ணாத்
தாமே பேணாதே நாணும் சமணொடு வாழ்பவரும்—
உறித்தலைச் சுமையொடு குண்டிகை பிடித்துக்—
குண்டமணராகி ஒரு கோல மிகு பீலியோடு
குண்டிகை பிடித்து,

என வருதலும் காண்க.

VII

உடலை ஒறுத்தல் இம்மட்டோடும் ஒழியவில்லை. துணியைத் துறந்து அலையார் புனலை நீத்துப் பாசிப் பல்லும், ஊத்தை வாயும், கொதுகறாக் கண்ணும், மாசு மேனியுமுடையராய்க் கால் கை வீங்கிக் குடையவும் வேர்த்துடல் விரியவும், புற்றேறி வெயில் உணங்கிக் கால் நிமிர்ந்து கையிலுண்டு முகங் கோணிக் கடுத்தின்று பீலியும்