பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


தொடங்கினால் உலகம் உய்ந்து போவது எங்ஙனம்? வேலியே பயிரை மேய்ந்த கதையன்றோ ஈது! அது பற்றியன்றே சம்பந்தர் பழிக்கின்றார்.

இதனை “உலோச்சு” என்ற பேரறம் என்பர். பாவலர் கண்ணுக்கு இவ்வளவு அழகாக விளங்கிய இவ்வொழுக்க இன்பம் அதனைத் துய்த்துணர்ந்தாருக்கு எவ்வாறு விளங்கியது?

"நீராடாப் பெண்கள் முறை முறையால்
நம் தெய்வமென்று தீண்டித்,
தலை பறிக்குந் தன்மையர்களாகி நின்று
தவமென்று அவஞ் செய்து தக்க (து)ஓரார்,"

என அப்பர் பாடுகின்றமை காண்க.

“கதி யொன்று மறியாதே கண்ணழலத் தலை பறித்து”

என இவ்வொழுக்கத்தின் கொடுமையைப் பாடுகின்றார் அப்பர் பெருமானார். இதன் கொடுமையை உணர்ந்தே எல்லா அறத்திலும் ஈதே தலை சிறந்த தென்னப் போற்றினர், திருத்தக்க தேவர்.

மணித் துணரனைய தங்குஞ்சி வண்கையாற்
பணித்தனர் பறித்தலின் பரவை மாநிலந்
துணித்தொரு துணி சுமந்தனைய திண் பொறை
அணித்தகு முடியினாய் ஆதி யாகவே!

[அணித்தகு முடியினாய்! சீவகா! நீலமணி அனைய கொத்தாகிய குஞ்சியைத் தங் கையாற் பறிக்கையினாலே இத் திண்ணிய பொறை யுடைமை நிலத்தை இரு கூறாக்கி அதில் ஒரு கூற்றைச் சுமந்து பொறுத்த தன்மையை ஒத்தது