பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

 

சம்பந்தரும் சமணரும்

1. கடவுட் பேராறு

 

தமிழரது கொள்கை ஒரு கடவுட் பேராறு. உலகம் தோன்றிய நாள் தொடங்கி, உலகனைத்தையும் தன்னருட் பெரு வெள்ளத்தில் மூழ்த்தி, இன்பமூட்டி, அறிவு விளங்கு எரிக்க விரைந்து போந்து, உண்மை முடிவு என முழங்கி, ஓடிவந்து கொண்டிருக்கிறது. இந்தக் கடவுட் பேராறு, இந்த ஆறு, உள்ள பொருள் ஒன்றே யாதலின், ஒன்றாய்த் திரண்டு பரவுவதும் இயல்பேயன்றோ?

“ஒன்றே உள்ளது. உயர்ந்தோர் பலவகையாகப் பேசுகின்றனர்.” (ஏகம் ஸத் விப்ர பஹுதா வதந்தி) என்பது திருமறை. உள்ளீடாய் உற்று நோக்குமிடத்து உயிருள் பொருளும், உயிரில் பொருளுமாய் ஒளிரும் உலகனைத்திலும் ஒரு பெரும்பொருளே உளதாதலைக் காணலாம். உண்மையாய், உண்மையில் ஒளிரும் அறிவாய், அவ்வறிவிலூறும் இன்பமாய்த் திகழ்வதே இதன் இயல்பாம். (சத் சித் ஆந‍ந்தம்.) எல்லாப் பொருளிலும் இவ்வியல்பு விளங்குதலின், இருப்பது இப்பொருளேயாம். உள்ளதாந்தன்மை எப்பொருளில் இல்லை? ஒரு பொழுது பனிக் கட்டியாய்த் திரண்டு ஒரு பொருள் உளதாகிறது. மற்றொரு பொழுது அப்பொருள் வடிவு மாறி, நீர் என்று வடி-