பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


வடிவழகில் ஈடுபட்டு மெய்ம் மறந்து, நாணொழிந்து புலம்புவதை இந்த உலாவும் புனைந்துரைக்கின்றது. சில பெண்கள் என்ன என்று புலம்புகின்றார்கள்? "இவன் நமக்கு இரங்கி அருள் செய்வான்; நம்மை இவன் சேர்வான்; இவன் தண்ணருளுடையான்; நாம் நோவப் பாரான் என்று எண்ணுவது என்ன பேதைமை. இவனன்றோ சமணர்களைக் கழுவேற்றிய கன்மனக் கொடியோன்; இவன் மனமோ இரங்கும்?" என்று கூறிப் புலம்புகின்றனராம்.

"நங்கைமீர்,
இன்றிவன் நல்குமே; எண்பெருங் குன்றத்தில்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப்- பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப் பாவொன்றினால் வென்றி
நிரைகழுமே லுய்த்தானை நேர்ந்து-விரைமலர்த்தாள்
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ?"

என்று வகுத்துரைப்பர் என்று பாடுதல் காண்க. திருஞான சம்பந்தர் திருக்கலம்பகத்திலும்,

அமணரைக் கழுநுதிக்கண் உறுத்தவனும் நீ.

என்றும்,

அறிவாகி இன்பஞ் செய்தமிழ் வாதில்
வென்றந்த அமணான வன்குண்டர் கழுவேற
முன்கண்ட செறிமாட வண்சண்பை நகராளி,

என்றும்,

அருகர்தர் குலமொன்றி முழுதும்
கழுவிலேறக் கறுத்தது.