பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


பண்டைநின் கரத்துக் கொண்டநீறு ஆகா;
          பகைமருந் திட்டநீ றின்று
கண்டிடிற் சென்னி மண்டலத் தவன்நீ"
          என்றுமுன் கண்டது விலக்க,
முண்டக வதனம் அழகெழச் சிறிது
          முறுவல்கொண் டுரைசெய்வார் முனிவர்.

"செந்தமிழ் பயிலும் சுந்தரன் கோயிற்
           றிருமடப் பள்ளியுட் கிடக்கு
மந்திர நீற்றை நீங்களே எடுத்து
           வரினும்ஆம் என்றலும் வெகுண்டு,
"வெந்தநீறு யாங்கள் தொடுவமோ" என்று
           விளம்ப. நம் தொண்டர் “போய் எடுத்து
வந்திடுக” என்றார். மிண்டர்கள் அதுவும்
           விலக்கினார் 'வழக்கல' என்றே.

"மன்னிய விபூதி கொடுவரு வதற்கு
           மனத்திலோர் சூழ்ச்சியும் இல்லீர்.
என்னிது பகர்ந்தீர்? நீங்களோ நணுகீர்.
           எம்முளோர் போகவும் ஒட்டீர்.
புன்னெறி யிலாதோர் தமைவிடும்: நுமக்குப்
           பொருந்தினோர் எமக்கும் ஆம்" என்ன
மன்னவன் முறையோர் தம்மைமுன் விடுப்ப
           வந்தனர் வெள்ளை நீறள்ளி.

நோய் ஒழிந்தது.

மன்னுநோக் குபதே சத்தால் வழுவுற உபதேசித் தாங்கு
இன்னருள் சுரந்து நீற்றை இருகரத் தாலும் அள்ளி
வெந்நொடு முன்னும் தொட்டுப் பூசுமுன் வெப்புந் தீர்ந்து
முன்னிமி ராத கூனும் நிமிர்ந்த தம்மூர்க்கர் காண.