பக்கம்:சரணம் சரணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னே & $.

பட்டர் அப்படிப் பார்க்கும். மெய்யறிவுடையவர்; . கண்ணேயுடையவர். அவர் எங்கும் அம்பிகையின் திருமேனிப் பிரகாசத்தையே காண்கிறார்.

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூனேன்; உனக்கன்பு பூண்டுகொண் டேன்; நின் புகழ்ச்சிஅன்றிப் பேனேன் ஒருபொழு தும்; திரு

மேனிப்ர காசம்.அன்றிக் காணேன், இருநில மும்திசை நான்கும் ககனமுமே.

தாயே விகை, உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளும் உபுன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தியைக்கொள்ள மாட்டேன்; நினக்கே அன்பை மேற் கொண்டேன்; ஆதலின் ஒரு காலத்திலும் தின் புகழையல்லாமல் வேறு ஒருவர் புகழிலும் விருப்பம் கொள்ளேன்; அடியிலுள்ள பெரிய பூமியிலும் சுற்றும் உள்ள நான்கு திசைகளிலும் மேலே உள்ள வானத்திலும் எங்கும் நின் திருமேனியின் ஒளியையன்றி வேறு ஒன்றையும் காணேன். -

வீன பூனேன், உனக்குப் பூண்டுகொண்டேன்; பேனேன், நிலமும் திசை நான்கும் ககனமும் ப்ரகாச மன்றிக் காணேன் என்று கூட்டுக. அன்பு பூணுதல் உள்ளத்தின் செயல்; புகழ்ச்சி பேணுதல் வாக்கின் செயல்; ப்ரகாசம் காணுதல் உடம்பின் செயல்.

இதல்ை மூன்று கரணங்களாலும் அம்பிகையின் வழிபாடே செய்வது புலகிைறது. முன் இரண்டும் முறுகி விளைந்தால் மூன்றாவது நிலே உண்டாகும்.

இது அபிராமி அந்தாதியில்4ே-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/121&oldid=680495" இலிருந்து மீள்விக்கப்பட்டது