பக்கம்:சரணம் சரணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சரணம் சரணம்

மிேன்னுயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற அன்ள்ை?? (55) என்று முன்னே உள்ள பாடல்களிலும் சொன்னர். ஒரு மாத்திரைப் போது தியானித்தாலும் பயனுண்டு என்பதை, ‘பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில், இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ, குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’ (48) என் பதிலும் சொல்லியிருக் கிறார்,

பிறந்தபோது பிறந்த குடியின் சிறப்பினுல் வண்மை முதலியவை இருந்தாலும், நாளடைவில் அவை குன்றி விடும் என்று பொருள் பண்ணும்படி அமைந்திருக்கிறது குன்றி” என்னும் சொல். -

இரப்பவர்களிலும் பல வகை உண்டு. சிலர் எப்போ தாவது இரக்கப் போவார்கள். அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் பொருளே வைத்துக்கொண்டு பல நாளேக்கு வாழ்வார்கள், அப்படி இன்றி அன்றன்று கிடைப்பது அன்றன்றைக்கு மட்டும் போதும் போதாததுமாக இருந் தால் அவர் நிலே மிகவும் இரங்குவதற்குரியது.

சிலர் பணக்காரர்கள் வீட்டுக்கு நன்றாக உடுத்துக் கொண்டு போவார்கள். யாரோ நண்பர்களென்று எண்ணிக் காவல்காரன் உள்ளே விட்டுவிடுவான். உள்ளே போனவர்கள் செல்வரிடம் ஏதாவதுபெற்று வருவார்கள். ஆல்ை கந்தல் துணி தரித்துப் பார்ப்பதற்கே அலங்கோல மாக இருப்பவர்களேப் பணக்காரர்கள் வீட்டுக்குள் விட மாட்டார்கள். ஏழைகள் வாழும் குடிசைக்குப் போய்த் தான் அவர்கள் பிச்சை வாங்க வேண்டும். இது மிகவும் பரிதாபமான நிலை.

தேக திடம் உள்ளவன் பிச்சை வாங்கும்போது கை நீட்டி வாங்குவான். நோயுள்ளவர்கள், வகையிலுள்ள விரல்கள் குறைந்துபோனவர்கள், கொடுப்பதைக் கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/148&oldid=680524" இலிருந்து மீள்விக்கப்பட்டது