பக்கம்:சரணம் சரணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சரணம் சரணங்

இது ஏன்? என்று கேட்டால் அவர் சொல்கிறார். ‘உல கத்தில் தவம் செய்கிறவர்கள் குறை, தவம் செய்யாதவர் களே மிகுதி. அதல்ை பணமுடையவர்கள் குறைவாகவும் ஏழைகள் பலராகவும் இருக்கிறார்கள்’ என்கிரு.ர்.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்; பலர் நோலா தவர்?? என்பது குறள். நோற்றல் என்பது தவம் செய்தலேக், குறிக்கும். புண்ணியச் செயல்களைச் செய்வதும் தவமே, ஆகும். ஆகவே முற்பிறப்பில் புண்ணியம் செய்த சிலர் செல்வராகவும், அது செய்யாத பலர் ஏழைகளாகவும் இருக்கிறார்கள். இப்போது செய்யும் புண்ணியச் செயல் களேயும், அநுபவிக்கும் துன்பங்களையும் இணைத்துப் பார்க்கக் கூடாது. அம்பிகையிடம் பக்திகொண்டு வழி படுகிறவர்களுடைய நில இந்திப் பிறவியில் எப்படி இருந்: தாலும் அடுத்த பிறவியில் அவர்கள் நன்மையே. பெறுவார்கள்.

இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு அபிராமிபட்டர் பாடுகிறார்,

வறுமையிலும் செம்மையாக இருக்கிறவர் சிலர் உண்டு; அப்போது வறுமையில்ை பழி உண்டாகாது. ஆல்ை பலர் பிறரிடம் சென்று இரக்கின்றர்கள். வறுமையைவிட இரப்பது தாழ்ந்தது. வறுமை நம் முயற். சியில்ை வருவது அன்று; ஆதலின் வறியவர்களைப் பழிப்பது பாவம். வறியவர்களாயினும் முயற்சி உடைய வர்கள் ஓரளவு வறுமைத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் நிலையைப் பெறுவார்கள்; உழைப்பில்ை ஊதியம் பெறுவார்கள். அப்படியின்றி வறுமையையே யாசகம் செய்வதற்குரிய அநுமதிச் சீட்டாக வைத்துக் கொண்டு இரக்கப் புகுகிறவர்கள் பிறருடைய அவமதிப் புக்கு ஆளாகிறர்கள். எந்தக்காலத்திலும் இரப்பது இழிவு,

‘நல்லா றெனினும் கொளல் தீது??

என்பது குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/32&oldid=680609" இலிருந்து மீள்விக்கப்பட்டது