பக்கம்:சரணம் சரணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஸ்ரீவித்யா உபாசகராகிய அபிராமிபட்டர் பாடி யருளிய அபிராமி அந்தாதி சிறந்த பாராயண நூல். அதனே நாள்தோறும் பயபக்தியுடன் ஒதிவந்தால் பல நல்ல பயன்கள் உண்டகும். தமிழில் அம்பிகையைப் பற்றி இத்தகைய நூல் வேறு இல்லே. அன்னேயைப்பற்றிய துதி நூல்கள் பல இருந்தாலும், அவளேப் பரதேவதையாகக் கொண்டு வழிபடும் உபாசகர் இயற்றிய நூல் இது ஒன்றே என்று தோன்றுகிறது. இவ்வாசிரியர் அபிராமியம்மை பதிகமும் படியிருக்கிரு.ர். -

அன்னையிடம் இடைவிடாத பக்தி செய்து மனமுருகித் தம்மை மறந்து நின்று அவளுடைய அருளுருவத்தை உள்முகத்தே தரிசனம் செய்யப் பெற்றவர், இந்தப் பேரன்பர். அபிராமி அந்தாதியில் தாம் பெற்ற அநுப வத்தை இவ்வாசிரியர் சொல்லும் இடங்கள் சில உண்டு. அவை மணிவாசகர் திருவாக்கோடும், அருணகிரியார் அநு. யவ் அருட் பாடல்களோடும் ஒப்புநோக்குவதற்குரியன. பொருள் மிகத் தெளிவாக விளங்கும் சொற்களால் இயன்ற பாடல்களான லும் ஆழமான அநுபவத்தில், எழுந்தவை இவை. -

அம்பிகையின் திருவுருவ வருணனையும், அவளுடைய தனித்தலேமையும், அவளுடைய அருட் செயல்களும் இப் பாடல்களில் விரவி வருகின்றன. எம்பெருமாட்டியின், பெருங்கருணேத் திறத்தை இவ்வாசிரியர் எடுத்து உரைக் கும்போது நம்முடைய உள்ளம் உருகுகிறது. அத்தகைய இடங்களே அபிராமிபட்டரின் தனித்தன்மையைக் காட்டு வனவாக இருக்கின்றன.

அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்கிறவர்கள் இப்போது மிகுதியாகி வருகிறார்கள். டில்லி, பம்பாய், சென்னை முதலிய இடங்களிலுள்ள பெண்மணிகள் வெவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/7&oldid=680650" இலிருந்து மீள்விக்கப்பட்டது