பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிய நாசவேலையே தான் என்று கண்டித்திருந்ததோடு முத் தாய்ப்பாகக் கவிதையும் எழுதித் தீர்த்தார் சாலிவாஹனன்

கங்குகரை பற்ற சுவைக் கம்பன் பாட்டைக் கழித்தொழித்துக் கூட்டித் தம் கசப்பைச் சேர்த்து தங்களிடம் உள்ள பெரும் புன்மைப் புத்தி தான்தோன்றித்தனம் செருக்கு எல்லாம் தோன்ற "இங்கிவைதான் கம்பனுடைக் கனிந்த பாடல் இவற்றை யவன் இவ்வாறே பாடக் கேட்டோம் எங்களுக்கே தெரியுமவன் கவிதைப் பண்பு!” என உரைத்துத் திரிகிறதோர் விஷமக் கூட்டம். பொங்கு புகழ்க் கோசலேயின் செல்வன் கானம் போவதற்குக் கைகேசி புரிந்த தீமை இங்கித்தக் கைகேசி முதலோர் கும்பல் இனிய சுவைக் கம்பனுக்கே சூழ்கின்றர்கள்; மயங்கிவிட்ட கொஞ்ச நஞ்சம் மறங்கொண்டேனும் மரபாவச் செயலிதனே மடக்காவிட்டால் சிங்கமெனச் சிவன்தனேயே எதிர்த்த கீரன் சீர் மிகுந்த தமிழ்ப்பெருமை அழிந்தே போகும். பாவமிது கலைப்பண்பு ரஜனே யென்று பாவனைகள் நிதம் செய்து நடிக்கும் இந்தக் காவியத்தின் கடும் பகைவர் கூட்டந்தன்னைக் கடிதினிலே கக்ாயவே களையாவிட்டால் பாவினிலே கொஞ்ச நஞ்சம் இரக்கம் உள்ள பரமார்த்தத் திருக்கூட்டம் ஒன்றைத் தங்கள் காவலெனக் கொண்டு நிதம் கடையர் செய்யும் காவியத்தின் கடுங் கொலைகள் சகிக்கொணுது.

இதற்கு எதிர்ப்புகள் வந்த போது, கலாமோகினி'யில் அம்பலம்’ என்ருெரு பகுதி துவக்கப்பட்டது. அதில் பதில் கூறும் போது, இந்த வியவகாரம் எந்த விதத்திலும் தனி மனிதர் சம்மந்தப் பட்டதே இல்லே. அதற்கு மாருக நிரந்தர இலக்கியங்களைப் பாதுகாப்பதில் கையாளப்பட்டு வரும் முறை

16 / சரஸ்வதி காலம் 町

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/22&oldid=561102" இலிருந்து மீள்விக்கப்பட்டது