பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலியுறுத்துவதும், நாசகாரித்தன்மை வாய்ந்ததுமான வெளி யீட்டை கடைகளிலிருந்து திரும்பப் பெற்று ஒழித்து விடுங்கள். இது கலேயும் அல்ல; இலக்கியமுமல்ல; பெருங்கறை, ஊன்

விலே வாணிபம் (இறைச்சி வியாபாரம்). -சாலிவாஹனன் இவ்விதம் எல்லாம் தீவிரமாக இலக்கியப் பணி புரியும் கடமையை மேற்கொண்டதால், மறுமலர்ச்சி இலக்கிய

முன்னணி என்று கலாமோகினி பெருமையோடு பொறித்துக் கொண்டது,

எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இல்லையே என்று வருந்தி யும், எழுத்தாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் அமைத்து இலக் கியப்பணி புரியவேண்டும் என்று கூறியும் கலாமோகினி' கருத்துரைகள் வழங்கியது. எனவே, 1944 -ல் கோயமுத்துரில் ‘முதலாவது எழுத்தாளர் மகாநாடு நடைபெறத் திட்டங்கள் வகுக்கப் பட்ட நாளிலிருந்து, மகாநாடு வெற்றிகரமாக நடை பெறும் வரை, அது உற்சாகமாகத் தலையங்கம் தீட்டிக் கொண் டிருந்தது. பின்னர், திருச்சி இலக்கிய முன்னணி அங்கு சென்று வந்தது பற்றி விரிவாகவும் சுவையாகவும் பல இதழ் களுக்கு எழுதியது.

'கலாமோகினி காலத்துக்கு முன்பு எல்லாப் பத்திரிகைகளும், தொடர் அம்சங்களுக்கு, 'தொடரும் என்ற அடிக்குறிப்பு கொடுப்பது வழக்கம். கலாமோகினி அப்படிச் செய்யாமல், 'வளரும் இது நீளும் இன்னும் வரும் இன்னும் இருக்கிறது’ மேலும் கொஞ்சம் நீளும் என்றெல்லாம் குறிப்பிட்டு வந்தது. அதைப் பார்த்து மற்றும் அநேக பத்திரிகைகள் அவ்வாறே குறிக்கத் தொடங்கின.

'கலாமோகினியின் அம்பலம் பரபரப்பையும் கவனிப்பையும் பெற்ற ஒரு பகுதியாக விளங்கியது. பத்திரிகைகளில் தங்கள் பெயர் வர வேண்டும் என்று ஆசை பற்றியும், நாமும் எழுத வேண்டும் எனும் துடிப்போடும் எழுதக் கிளம்புகிறவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கதைகளைத் திருடுவதோடு நிற்பதில்லை.

堑 வல்லிக் கண்ணன் / 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/25&oldid=561105" இலிருந்து மீள்விக்கப்பட்டது