பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டித்து எழுதியிருக்கிருர்கள். வரவேற்கத்தக்க விமர்ச னம்.

திருமதி கன்னம்மாள் ஆபாசம் என்று கூறும் அந்தப் பகு தியைப் பார்க்கலாமா? சென்ற இதழில் நான் எழுதியிருந்த பால்பேதம் என்ற கதையில் ஒருதாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதாக ஒரு நிகழ்ச்சி.

அந்தப் பகுதியைப் படித்து விட்டு முகம் சுளிக்கும் சகோ தரி தன்னைப் போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் இதைப் படித்துக் கெட்டுப் போக மாட்டார்களா என்ற பொருள் பட எழுதியிருந்தார்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஏனெனில் நான் தாயாக மாறிவிட்டபின், தாய்மை உணர்ச்சியை விழுங்கி, அந்த உணர்ச்சித் தவிப்பில் திக்கு முக்காடித் தான் அதை எழுதி விட்டேன்.

தாயின்மார்பைக் கவ்விக் கொண்டிருக்கிறது குழந்தை. அத் தக் காட்சியை தினத்தவுடன் தாயின் உணர்ச்சியை நான் வருணிக்கவில்லை. நானே தாயாக மாறி ஆஹா என்ன சுகம். என்ன சுகம்’ என்று பிதற்றத் தொடங்கினேன். நான் என்ற உணர்ச்சியில் அல்ல; தாய் என்ற உணர்ச்சியில்.

ஆம். இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் கலேயில் வல்ல வனே சிறந்த இலக்கிய கர்த்தா.

சிறந்த கவிஞர்கள் எல்லாம், கலைஞர்கள் எல்லாம், கிரந்த கர்த்தர்கள் எல்லாம், இந்தக் கலையில் கைதேர்ந்த மேதை களாய்த் திகழ்கின்றனர். அவர்களின் சிருஷ்டிகள் காலம் உள்ளளவும் நிலத்து நிற்கும். - -

தாய்மை உணர்ச்சி! குழந்தைக்குப் பால் கொடுக்கும் காட்சி... அந்தக் காட்சி என் மனசில் வந்ததும் நான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விட்டேன். நான் பெண்ணுகி விட்டேன் தாயாகிவிட்டேன்.

90 / சரஸ்வதி காலம் 羈

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/96&oldid=561177" இலிருந்து மீள்விக்கப்பட்டது