பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சரிந்த சாம்ராஜ்யங்கள்



கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் மாறுபட்ட சாம்ராஜ்யங்கள், மக்கள் அன்பைப் பெற்றாலும், மாற்றானின் நட்பில்லாத சாம்ராஜ்யங்கள், மன்னன் வலிமையின் தோழன் என்றாலும், பூகோள விதிமுறைக்கு அப்பாற்பட்ட சாம்ராஜ்யங்கள் தோன்றவே முடியாது என்ற அழியாத உண்மைக்கு இந்திய மண்ணில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்கள் சான்றுகளா என்ற தத்துவத்தை உலகம் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றது.