வை.மு.கோ.103-வது நாவல்
90
கையை இதுவரையில் கண்டதில்லை. எல்லாம் நல்லதற்கே என்கிற பழமொழிப்படி, சகலத்தையும் நன்மைக்கென்றே நீ நம்பி, மனத்தைத் தேற்றிக் கொண்டு, சாந்தியை அடை. நம் தாயாரையும் சாந்தியடையச் செய்… கேவலமான மிருக வாழ்க்கை வாழ்ந்து, கடைசியிலும் தன்னைத் தானே நாசமாக்கிக் கொண்ட நம் பிதாவின் செய்கையே, என் மனத்தைக் கல்லாக்கி, வைராக்ய நிலையில் நிறுத்தி விட்டது. அதைப் பின்னும், ஊர்ஜிதப் படுத்துவதற்காகவே, இத்தகைய சம்பவங்களை பகவான் எனக்குக் காட்டி, என்னை ரக்ஷிக்கின்றார் என்றுதான் நான் சந்தோஷப்படுகிறேன். தம்பீ! நாம் இங்கிருந்து புறப்படும் போது, நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாய் என்பதை நானறியவில்லை என்றுதானே நீ நினைக்கிறாய்… அந்த தேவலோக ரம்பையைக் கண்டு, நான் எங்கே மோகித்து, சொக்கிப் போய், உனக்குப் பங்காளியாகி விடுவனோ என்றல்லவா நீ நினைத்தாய் ! தம்பீ! இந்த ஜென்மத்தில் எனக்கு பகவான் அத்தகைய புத்தியைக் கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி எனக்கு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுமானால், அப்போதும் இம்மாதிரி முறை தவறி நடக்க, சத்யமாய் முன் வரமாட்டேன். இதை மட்டும் கடவுள் மீது ஆணையாக நம்பு…” என்று உணர்ச்சி ததும்பக் கூறினான்.
ஆனால், தாமோதரன் எத்தகைய பதிலும் சொல்லவே இல்லை. முகத்திலுள்ள கோபக்கனலும், ஏமாற்றத்தின் எதிரொலியும் மட்டும் மாறவே இல்லை. மறுபடியும் டாக்டரே பேசத் தொடங்கி, “தம்பீ! வாழ்க்கை என்பது ஒரு கப்பல்; அந்தக் கப்பல் சம்ஸார ஸாகரத்தில் போகும் போது, எத்தனையோ அபாயங்கள் தோன்றி, கப்பல் உடையவும், ஆட்டங் கொடுத்துத் தவிக்கவும், கவிழ்ந்து போகவும், மலைகளில் மோதுண்டு தப்பிக்கவும், நீர்வாழ் துஷ்ட ஜந்துக்களினால் விபத்துக்குளாகியும், பலபல விதங்களில் சிக்கினாலும், அதை ஜெயித்து நீந்தியடித்துக் கொண்டு, அக்கரை செல்பவனே சரியான மாலுமி; அவனே சாந்தியின் சிக-