வை. மு. கோ. 103-வது நாவல்
110
கூறும் போது, அவன் உள்ளம் ஒரேயடியாக மரத்துத் தம்பித்து விட்டது. ‘இதென்ன வேடிக்கை, இந்த விஷ மருந்து இங்கு எப்படி வந்தது!’ என்று அவனுக்கு மகத்தான ஆச்சரியமும், குழப்பமுமே உண்டாகிக் கலங்கி விட்டான்… இதுதான் சோதனையின் கொடுமை போலும்… என்று ஒரு மின்வெட்டுப் போன்ற அதிர்ச்சியும் உண்டாகி வதைத்தது.
“ஐயையோ! இது சுத்த பொய்! இந்தச் சண்டாளன் சொல்வது முற்றிலும் பொய். நான் இப்போதுதான் வந்தேன். டாக்டர் ஸ்ரீதரன் வந்ததே எனக்குத் தெரியாது; நான் இவருடைய குடும்ப வக்கீல் என்பது உண்மைதான்; இந்தவிஷயங்கள் பூராவும் சுத்த பொய். தன் மகள் தனக்கு த்ரோகம் செய்து விட்டதால், துரைக்கண்ணன், தானே தன் கைகளால் தன் மகளைக் கொன்று விட்டு, தன் சொத்துக்களைப் பூராவும் டாக்டர் ஸ்ரீதரனுடைய தர்ம வைத்யசாலைக்குக் கொடுத்து விட வேண்டும் என்று உயில் எழுதச் சொன்னபடி நான் எழுதினேன். அவர் கையொப்பமிட்டார். அந்தக் கடிதத்தை நான் திருப்பிப் பார்த்து மடிப்பதற்குள், இதோ இந்தப் பாவி என்னிடமிருந்து ,அதை ஒரே நொடியில் பிடுங்கிக் கொண்டதோடு, இத்தகைய அனியாயக் கற்பனையைத் திரித்து உங்களிடம் கூறுகிறான். இவன் சொல்வது முற்றிலும் பொய்… சத்யமாகப் பொய்” என்று வக்கீல் கதறுகிறார் பாவம்.
“ஸார்! வக்கீல் சொல்வதுதான் சத்யம்; ஸ்டோன் பெயருக்கேற்றாப் போல், கல்லினும் கடின சித்தத்துடன் பொய் ஜோடனை ஜோடித்து, உங்களையும் கலக்குகிறார்! துரைக்கண்ணன் அவர்களுடைய டாக்டர் நான். அவருக்கு வைத்யம் செய்து குணப்படுத்தினேன். அவருடைய ஒரே மகளை, அவர் உயிரினும் இனியதாக நேசித்து வந்தார். அந்த மகள், இந்தப் பாதகனை மணந்த கொடிய விஷயம் தெரியாது, அவருடைய மகளை நான் மணக்க