113
சாந்தியின் சிகரம்
…“இனி நான் ஒளிக்க விரும்பவில்லை. இந்தக் கொலையில் பூராவும் சம்மந்தப்பட்டு, இருவரையும் கொன்றது நானேயாகும்; இவர்கள் மூவரும் நிரபராதிகள். இவர்கள் மீது எத்தகைய குற்றமும் கிடையாது! பொருளாசைக்கும், பெண்ணாசைக்கும் அடிமையாகி, நானே இரண்டு கொலைகளையும் செய்தவன், ஆகையால், அவர்களை தயவு செய்து விட்டு விடுங்கள். கொலை செய்தவன் நான்தான் என்று, நானே ஒப்புக் கொள்கையில், நிரபராதிகளை ஏன் வருத்த வேண்டும்? கருணை காட்டி அவர்களைச் சம்மந்தப்படுத்தாது விட்டு விட வேண்டும்” என்று டாக்டர் கெஞ்சிக் கேட்பதைக் கண்ட போலீஸாரே, முதலில் வியப்புற்று நின்றார்கள். வக்கீலும், குமாஸ்தாவும் “நாங்களும் இக்கொலையில் சம்பந்தப்படவில்லை. அவரும் நிரபராதி; அங்ஙனமிருக்க டாக்டர் சொல்வது பொய்; அவர் குற்றவாளியல்ல…” என்று கதறியும், அங்குள்ள சகலமான சந்தர்ப்ப சாக்ஷிகளை கொண்டு, டாக்டர்தான் குற்றவாளி என்பதை நம்பி, டாக்டரைக் கைது செய்தார்கள். தாமோதரனின் இரும்பு உள்ளத்தின் கடினம் எப்படியோ நீங்கி, தன் அண்ணனின் த்யாக புத்தியின் ப்ரகாசம் அப்போது தான் பளிச்சென்று புரிந்தது.
16
தனது இரண்டு குமாரர்களும், ஜெயப்ரதமான விஷயத்துடன் திரும்பி வரப் போகிறார்கள் என்று கமலவேணியம்மாள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கையில், துரைக்கண்ணனுடையவும், அவருடைய மகளுடையவுமான கொலை விஷயம் ஊர் பூராவும் காற்றுப் போல் பரவி விட்டது மட்டுமின்றி, ‘டாக்டர் ஸ்ரீதரன் குற்றவாளியாய் கைது செய்யப்பட்டு விட்டாராம்’ என்ற விஷயம் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து விட்டதால், ஸ்ரீதரனுடைய சினேகிதர்கள், அபிமானிகள், டாக்டர் சினேகி-
சா—9