123
சாந்தியின் சிகரம்
பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு வந்த வெள்ளைக்காரனின் சாட்சியங்களையும், சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்து இந்த மகானுபாவனை இப்படிக் கைது செய்யலாமா! போலீஸ்காரர்கள் செய்தது அக்ரமமேயன்றி வேறில்லை. இந்த அநியாயத்தைப் பொது மக்களாகிய நாங்கள் பொறுக்க மாட்டோம். இந்த ஏழைப் பங்காளனை நிரபராதி என்று விடுதலை செய்துவிட்டுத்தான், நாம் சும்மா இருப்போம். அநியாயத்திலும் கொடிய அநியாயம் இது!… ஊரறிந்த பெரிய டாக்டரா இத்தகைய கேவலமான காரியத்தைச் செய்வார்? என்று கொஞ்சங்கூட யோசிக்காமல், போலீஸார் கைது செய்தது தவறு தவறு" என்று ஒரே கூக்குரலிட்டுக் கத்தும் பொதுமக்களைப் போலீஸார் எத்தனையோ ப்ரயாஸைப்பட்டு விலக்கினார்கள்.
சில மனிதர்களின் ஸ்வபாவத்தில், சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் மனம் அதிர்ச்சி தாளாமல் சோர்ந்து மூர்ச்சையாகி விடுவதும், இதயமே நின்று விடுவதும் அல்லது பலஹீனப்பட்டுப் பல பல வ்யாதிகளில் கொண்டு விடுவதுமாக ஆகி விடுகின்றன. ஆனால், அவர்களுக்கே மகத்தான பெரிய, பெரிய அதிர்ச்சிகள் உண்டாகி விடும் போது, அதே மனிதர்களின் இதயத் தளர்ச்சி எப்படியோ மாறிப் போய்க் கெட்டிப்பட்டு, மேலும் மேலும் உழைக்கப் பின் வாங்காத நிலையை அடைந்து விடுவதை உலகில் ப்ரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.
தற்சமயம் கமலவேணியம்மாளின் நிலைமை அதே ரகத்தைச் சேர்ந்து, உரம் பெறத் தொடங்கியது. மகன் விவாகம் செய்து கொள்ளாமல், சன்யாசியாகி விடுகிறான் என்றதைக் கேட்டு இடிந்து போன இதயம், இப்போது கொலைக் குற்றத்திற்காகத் தன் மகனை. அக்ரமமாய், அநியாயமாய்க் கைது செய்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டதும், தீவிரமான ஆக்ரோஷம் உண்டாகி, எப்படியாவது சண்டை செய்து, தன் மகன் நிரபராதி என்பதை நிலை