உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

128

கடுமையாக எண்ணி விட்டேன். அநியாயமாய்த் தாக்கிப் பேசி, மனத்தைப் புண்படுத்தி விட்டேன். அவன் பரம பக்தன், உத்தமன், அனாதைகளின் போஷகன் என்ற சிறந்த செய்கைகளை எல்லாம் நான் வெறும் வேஷம், போலி டாம்பீகம், ஊரை ஏமாற்றும் மோசடிச் செய்கைகள் என்று எண்ணி விட்டது மகா பாதகம் என்பதை இன்று உணர்ந்து விட்டேன்.

இனி நான் எதை உணர்ந்து என்ன உபயோகம்? காரியம் கரை கடந்து விட்டது. இனி நான் அழுதாலென்ன! முட்டிக் கொண்டால்தான் என்ன! அண்ணாவை நிரபராதி என்று ருஜு செய்யும் வரையில், நான் ஒரு வேளை உபவாஸமிருந்து, தீக்ஷை வளர்த்து, கங்கணங் கட்டிக் கொண்டு உழைக்கப் போகிறேன். துப்பறியும் நிபுணர் ஸ்ரீ ராஜாராம் நாயுடுகாருவின் உதவியைக் கோரி, அவருடைய திறமையினால், இந்த வழக்கில் அண்ணனுக்கு ஜெயத்தைப் பெற வேண்டும் என்று மனது துடிக்கிறது. அண்ணாவோ, எதையும் செய்யக் கூடாதென்று தெய்வ சாட்சியாக ஆணையிட்டு உத்திரவு செய்திருக்கிறார். நான் என்ன செய்வேன் அம்மா!” என்று கதறினான்.

கமலவேணியின் நிலைமையில் சிறிய மகனின் மாறுதலைக் கண்டு, ஒரு புறம் வியப்பும், ஒரு புறம் சந்தோஷமும் உண்டாகியது. “குழந்தாய்! தாமோதரா! இத்தனை நாள் உன்னுடைய நலனுக்காகவே, நான் சொல்லிய சகல மொழிகளும் உனக்கு விபரீத தீமைகளாகவே தோன்றின. பெற்ற தாயின் தவிக்கும் உள்ளத் துடிப்பை நீ அறியாது வீணாகி விட்டாய். போனது போகட்டும்; இப்போதாவது உனது நல்ல காலத்திற்கு இத்தகைய மாறுதல் உண்டாகியது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். அண்ணனின் ஆணையின் படிக்கு நீ வேண்டுமானால், நேரடியாக எந்த ப்ரயத்தனமும் செய்ய வேண்டாம்; என் மனம் கேட்கவில்லை; தவிக்கின்றது; நானும் உன்னைப் போல், துப்பறியும் ராஜாராம் நாயுடுவின் உதவியைப் பெற்று, எப்பாடு பட்டேனும்