உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

சாந்தியின் சிகரம்

என்ன ஆச்சரியம்! தன்னிலை மறந்து படுத்துள்ள நோயாளிகளும் கூட, “ஐயோ! எங்க டாக்டருக்கா இந்த கதி வருவது? அவரா கொலை செய்திருப்பார்! இதென்ன அக்ரமம்? இதென்ன அநியாயம்? இதைக் கேட்பார் இல்லையா? கடவுளே! எங்கள் உத்தமரான டாக்டரை விடுதலை செய்து விடு. படாப்பழியை நீக்கிக் காப்பாற்று” என்று வேண்டிக் கொள்வோரும், சில நோயாளிகள் கும்பல் கும்பலாக இதைப் பற்றியே பேசுவதும், கண்ட தாமோதரனுக்கு அண்ணன் மீதுள்ள மதிப்பும், ப்ரேமையும் பின்னும் பன்மடங்காய்ப் பெருகியது. அந்தந்த ஸ்தாபனங்களின் மானேஜர்களைக் கண்டு, அவர்களிடம் தனது மாறுதலையும், தான் இதுகாறும் செய்து வந்த கொடுமையையும், தானே பகிரங்கமாகக் கூறி வருந்தினான். “ஸார்! அண்ணா எப்படி எல்லாம் இந்த ஸ்தாபனங்களுக்குச் செய்து வந்தாரோ, அதே போல் என்னை நடத்தும்படி அண்ணாவின் கட்டளையைச் சிரசாவகித்து வந்திருக்கிறேன். ஆகையால், பணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம்… ஸ்தாபனங்கள் முன்னிலும் சிறப்பாக நடந்து, அதைக் கண்டு அண்ணா மனப்பூர்வமாய்க் களிக்கும்படி நாம் செய்ய வேண்டும். இதுதான் எனது லக்ஷ்யம்! என்னைப் பழைய தாமோதரனாக இனி எண்ண வேண்டாம்; நானும், மனிதனாகவே மாறி விட்டேன். ஆகையால், சகல காரியங்களும் நன்றாக நடக்கட்டும. அண்ணாவுக்குப் பதில், அவருடைய நண்பரும், பெரிய டாக்டருமான ஸ்ரீமான் ஆத்மநாதரை நான் நேரில் சென்று பார்த்து வேண்டிக் கொண்டு, இங்கு அழைத்து வருகிறேன். அவர் பூராவும் கவனித்துக் கொள்வார். லேடி டாக்டர் துளஸீபாய் கவனித்துக் கொள்வதாக ஏற்கெனவே கேள்விப்பட்டுச் சந்தோஷமடைகிறேன். எந்த விதத்திலும், ஒரு குறைவுமின்றி, ஸ்தாபனங்கள் நடக்க வேண்டிய முறையில் நடக்கட்டும், நான் வருகிறேன்!” என்று கூறி விட்டு, சகல நோயாளிகளையும் பார்த்து, “நீங்கள் கவலைப்படாதீர்கள்;

சா-12