உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

சாந்தியின் சிகரம்

‘ஒரு வேளை இந்தக் கொலை வழக்கிற்கு இவனுக்கு ஸாதகமானது, ஏதாவது குறிப்புகள் இருக்குமோ?’ என்ற நோக்கத்துடன் பார்த்தான். அது வெறும் டயரியாய் இல்லாமல் ஏதோ ரஸமான—ஸ்வாரஸ்யமான—கதைகள், பாடங்கள், தோத்திரங்கள் படிப்பது போன்ற ஆனந்தமான விஷயங்கள் காணப்பட்டனவேயன்றி, அசட்டுப் பிசட்டு வார்த்தைகளோ, காதல் கீதல் பிதற்றல்களோ காணப்படவே இல்லை. அந்த டயரியில், இவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சில பாகங்களைத் திரும்பத் திரும்பப் படித்தான். அவைகள் வருமாறு:-

தேதி…… மாதம்…
இன்றய சம்பவங்களில், மாதவன் வீட்டில் நடந்தது ஒரு வியப்பிலும் வியப்பானதாகும்! ரதியோ, தேவ கன்னியோ, வன மோகினியோ என்றெல்லாம் வர்ணித்து, ஒரு பெண் தெய்வத்தை என்னெதிரில் கொண்டு நிறுத்தி, அவளை மணக்கும்படி வேண்டினார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அவளை விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் போல் தோன்றியது. அதை நான் தெரிவித்த போது, என்னை நம்பாது, அவர்கள் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு என்னை அசைக்கவில்லை. அதே சமயம் அங்கு மாட்டப்பட்டிருந்த பகவானின் படம் என்னைப் பார்த்து, புன்முறுவல் பூத்து, “சபாஷ்! ஸ்ரீதர்! இந்த உறுதியை நான் மெச்சுகிறேன்” என்று சொல்லியது போன்ற ஒரு தோற்றம் உண்டாகியது. அதுவே எனக்குப் போதும். நான் பார்க்கும் சகலமான பெண்களும், என் கண்ணுக்கு தெய்வங்களாகவே தோன்றுகிறது. இதுவே, எனக்குப் பேரானந்தமாயிருக்கிறது.

தேதி…… மாதம்…
என் தம்பியின் நடத்தையைப் பற்றிப் பிறர் குறை சொல்லக் கேட்கும் போது மிகவும் மனம் கலங்கித் தவிக்கிறது. என் தாயாரிடம் எத்தனை சொல்லியும்