வை. மு. கோ. 103-வது நாவல்
142
படங்கள் நிறைந்த ஆல்பம்கள், பத்ரிகைகள், சகலத்தையும் எடுத்துத் தோட்டத்தில் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தினான்: “எரிந்து சாம்பலாகி விடுங்கள்! இனி தாமோதரனின் விடுதியில் கூட உங்களுக்கு இடமில்லை” என்று தனக்குள் எண்ணிக் களித்தான். சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ட சினிமாக்காரிகளின் படங்களையும் கழற்றி வீசி எறிந்தான். உத்தமமான சிறந்த கடவுளின் படங்களையும், புண்ய புருஷர்களின் படத்தையும், தன் அண்ணாவின் படத்தையும் மாட்டி, முதலில் தன் விடுதியைப் புனிதமாக்கி விட்டுத் தாயாரிடம் ஓடி வந்தான். தலை தூக்காமல் புலம்பும் கமலவேணிக்கு, ஆறுதல் சொல்லிக் கொண்டு, தன் சகோதரிகள் பக்கத்திலிருப்பதைக் கண்டான்.
அதே சமயம், தபால்காரன் சந்திராவுக்கு ஒரு கடிதம் கொண்டு கொடுத்தான். அதையவள் படித்து, அப்படியே விம்மி விம்மி அழத் தொடங்கினாள். இதைக் கண்ட தாமோதரன், ஒன்றுமே புரியாமல், “என்ன சந்திரா! கடிதத்தில் என்ன இருக்கிறது?”… என்று அன்புடன் கேட்டான். சந்திரா கடிதத்தையே அவனிடம் கொடுத்தாள். தாமோதரன் மனத்திற்குள் படிக்கலானான்: