உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

156

மனைவி மக்கள் தவிப்பார்கள் என்றெல்லாம் கூறி, ப்ரலாபிப்பதைக் காண, ஜெயிலருக்கு மன வெறுப்பே உண்டாகியதால், அங்கு அதிக நேரம் தங்காமல் சென்றார்… இந்த உலகத்தின், விசித்திரப் போக்கும், மக்களின் அதிசயமான மனோபாவத்தின் வேறுபாடுகளும் ஒன்று கூடி, அவர் உள்ளத்திலும் கூடச் சிந்தனை அலைகளை எழுப்பித் திகைக்க வைத்தது.

22

ம்மா! நீங்கள் இப்படியே சதா கண்ணீரும், கம்பலையுமாய்ப் படுத்திருந்தால், சின்ன அண்ணனுக்கு அது மிகவும் விசனமாக இருக்கிறது. அவர் தனது பழைய நிலைமை மாறி, முற்றிலும் புனர்ஜென்மம் எடுத்துப் பெரிய அண்ணனைப் போல், நல்ல முறையில் வரும் நோக்கத்துடன் இருக்கையில், உங்கள் பரிதாபம் தாங்காது, உடல் மெலிந்து நோயாளி போலாகி விட்டார். அதை நீங்கள் பார்க்க வேண்டாமா? அம்மா! எழுந்து உட்காருங்கள்” என்று உஷாதேவி மிகவும் சாந்தத்துடனும், கனிந்த அன்புடனும் கூறிக் கமலவேணியம்மாளைத் தூக்கி, உட்கார வைத்துத் தானே தாங்கிக் கொண்டாள்.

கமலவேணியம்மாளுக்கு, உஷாவினிடம் உண்டாகியுள்ள அளப்பரிய வாத்ஸல்யத்தின் தன்மை கூறத் தரமில்லை. உஷாவைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, “செல்வீ ! பூகம்பம் வருகிறது… அதில் ‘எத்தனையோ கட்டிடங்கள் பூமியில் மறைந்து போவதும், பூமியில் புதைந்திருந்த கட்டடம் மேல் நோக்கி எழும்புவதும் வியப்பிலும் வியப்பு!’ என்று கூறக் கேட்கிறோமேயன்றி… நாம் கண்ணால் காணவில்லை. அந்த விசித்திரத்தை விடப் பன்மடங்கு விசித்திரமாக உள்ளது உன்னுடைய மாறுதலும், தாமோதரனுடைய மாறுதலும். கண்மணீ! உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம், குளிர்ந்த சோலையைப் போன்று