வை.மு.கோ. 103-வது நாவல்
182
தில் ஒரு புதிய உணர்ச்சி தவழ்ந்து கண்களில் ப்ரகாசித்தது.
இந்த வார்த்தையைக் கேட்ட ஸ்ரீதரன் உள்ளம் பூரித்துப் புளகிதமுற்ற வேகத்தில், தான் ஒரு கைதி, அதிலும் கொலைக் குற்றம் செய்ததாக தண்டனையடைந்த கைதி என்பதையே மறந்து, ஜெயிலரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, தனது சந்தோஷத்தையும், நன்றியறிதலையும் தெரிவித்து வணங்கினான். அதே சமயம், அடிபட்டுள்ள கைதி சிறிது கண்ணைத் திறந்து பார்க்கவும், நாக்கை நொணாசி தாகம் என்று தெரிவிப்பது போலும் செய்வதைக் கண்டு மிக்க சந்தோஷத்தை யடைந்த ஜெயிலர், அந்த கைதிக்கு ஜலம் சிறிது குடிக்க வைத்தார். ஜலம் குடித்த கைதி நன்றாகத் தெளிவு பெறாததால், அப்படியே மறுபடியும் கண்ணை மூடிப் படுத்து விட்டான். “சரி… எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் வருகிறேன் உங்கள் தம்பிக்கும், தங்கைக்கும் இன்றே கடிதம் எழுதி விடுகிறேன்” என்று கூறி விட்டு, பழயபடி காவல் பந்தோபஸ்துடன் ஸ்ரீதரனை ஜெயில் ரூமுக்கு அனுப்பி விட்டுச் சென்றார். ஸ்ரீதரனுக்கு மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத உணர்ச்சி, மனத்தில் கொந்தளித்தது.
25
“ஹல்லோ! யார் பேசுவது… உஷாதேவிதானே! குட்மார்னிங் ஸிஸ்டர்! என்ன சமாசாரம்… என்ன! டாக்டர் ஸ்ரீ தரனைப் பார்க்க உத்திரவு கிடைத்து விட்டதா? மெத்த சந்தோஷம். நான் கட்டாயம் வருகிறேன்… என்ன! அவரே சொல்லியனுப்பினாரா!… ஆச்சரியமாயிருக்கிறதே. மிஸ். உஷாதேவி! இன்னும் ஒரே ஒரு விஷயம். டாக்டர் ஸ்ரீதரனுடைய முக்ய