உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

சாந்தியின் சிகரம்

அதன் மேல் கடப்பைக் கல் மூடியிருப்பதும், என் கண்ணில் பட்டது. நான் அவளுக்குத் தெரியாமல், கடப்பைக் கல்லை காலாலேயே புரட்டி, சாக்கடைக்குள் காலை வைத்துக் காலாலேயே துளாவினேன். சில காகித குப்பைகள் அதில் எலியோ, பெருச்சாளியோ இழுத்துத் தள்ளியிருந்தது தெரிந்தது; உடனே அவைகளைக் காலாலேயே எடுத்து, என் ஜோபிக்குள் அடைத்துக் கொண்டு, கடப்பைப் பாறையைத் தள்ளி விட்டு, அவளிடம் ஓடி வந்து, “அதோ ஒரு கடப்பைப் பாறை மூடியிருக்கும் இடத்தில் புதையல் இருக்குமோ பாருங்கள், நான் இங்கு காவல் இருக்கிறேன்” என்று அதனிடம் அவளையனுப்பிவிட்டு, மறைவான இடத்தில் டார்ச்சு விளக்கில், இந்த கடிதங்கள் குப்பை காகிதமா? சரியான புள்ளியா என்று கவனித்தேன். என்ன ஆச்சரியம்! கண்ணபிரானின் கையெழுத்து பளிச்சென்று தெரிந்தது; தேதியை முதலில் பார்த்ததும், கொலை நடந்த தேதியே ப்ரதானமாய்த் தெரிந்ததும், நான் துள்ளி குதித்து மகிழ்ந்து, கடவுளை எல்லாம் வணங்கி, மானஸீகமாய் டாக்டருக்கு ஆசி கூறினேன். எந்த மனுஷியை சந்தேகித்தேனோ, பாவம் அவளே வந்து உண்மையைக் காட்டியது போலாகி விட்டது.”

என்றதைக் கேட்டதும், எல்லோரும் ஆனந்தமாய்க் குதித்தார்கள். தன்னை மீறிய உணர்ச்சியுடன், தாமோதரன் அப்படியே அம்புஜத்தின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தாயே! நீங்கள்தான் எங்கள் குல தெய்வம்! இதற்கு மேல், எங்களால் சொல்லவே தெரியவில்லை!” என்றான்.

“எல்லாம் ஸ்ரீகீதாசாரியன் செயல்; என்னால் என்ன இருக்கிறது. இத்தனை சுலபமாய் இந்த வெற்றி