வை.மு.கோ. 103-வது நாவல்
234
விக்கவே பிறந்த கட்டையாகையால், போகவில்லை என்று கூட நான் வெறுத்தேன். இப்போது இந்த நிமிஷம், என்னுடைய அதே உள்ளம் என்ன நினைக்கிறது தெரியுமா… தன் செல்வ மகன் கொலைகாரன் என்கிற படாப் பழியைக் கேட்ட உடனே, அந்தக் கலக்கக் கறையுடன் சாவது மகத்தான பாபமாகும்; அவன் நிரபராதி என்று கேட்டு, பேராநந்தமடைந்த பிறகு, சாவதுதான் பாக்யமாகும்.நீ சரியான புண்யவதி என்று இப்போதுதான் வெளியாகிறது என்று பறை சாற்றுகிறது. இதற்குக் காரணம் நீங்களும். உங்கள் பிதாவுமல்லவா? இப்போது என் மனக்களிப்பின் வேகத்தில், நான் எப்படித்தான் உங்களைக் கொண்டாடிப் பேசுவது என்றே தெரியவில்லை. எங்கள் குல விளக்கு மங்கி அணைந்து போகும் தருவாயிலிருந்ததைச் சுடர் விட்டெரியும்படி ஏற்றி வைத்து, மாசுமருக்களைக் களைந்தெறிந்த புண்யாத்மாக்கள் நீங்கள் என்றால் மிகையாகாது. என்ன பரோபகாரம், என்ன த்யாக உழைப்பு! இந்த வழக்கிற்காக நீங்கள் ஒரு கேவலமான கபட வேஷதாரியிடம், இத்தனை நாட்கள் வேலைக்காரியாயிருந்த ஒரு செய்கையை எண்ண, எண்ண எங்களுக்கு மயிர்க் கூச்செறிகிறது…”
என்று கட்டு மீறிய களிப்புடன் சொல்வதைக் கேட்ட சுந்தராம்பாளின் உள்ளம், ஆநந்தத்தினால் புளகிதமுற்றது. “அம்மணீ! எப்படியும் எங்கள் குடும்பத்துடன் நீங்களும் கலந்து விட்டீர்கள். ஆகையால், உங்கள் சகோதரியைப் போல, உஷாவை எண்ணிக் கொண்டு, அவள் வாழ்நாள் வீணாகாதபடி, அவளையும் உங்கள் தொழிலில் பழக்கி, பொது ஸேவை செய்யும்படிக்குச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதற்குள் அம்புஜம் வந்தவர்களுக்கெல்லாம் டிப்பன், காப்பி முதலியன கொடுத்து, “சந்தோஷமாக