போலிருக்கிறதே. கொலையாளியும், குற்றவாளியும் நானாக இருக்க, நான் இராஜபோகத்தை அனுபவிக்கவும், எனக்காக அந்த மனிதன் இப்படித் திண்டாடுவதும் எத்தனை பாவம்! இவனுடைய மகன்தான் ஸ்ரீதரன் என்கிற ரகஸியமும் தெரிந்து விட்டது. என்ன செய்வது?’—என்று தனது குற்றத்தைத் தானே என்னிடம் கூறி, கண்ணீர் விட்டுக் கதறினார். தானே பழைய குற்றவாளி என்று சர்க்காரிடம் வெளியிட்டு விடட்டுமா! என்றும் கத்தினார். நான் அவரைச் சமாதானப்படுத்தி, “ஸார்! ஸ்ரீதரன் நிரபராதி என்பது சரியான காரணங்களுடன் ருஜுவாகி விட்டது; ஆகையால், அவரை சீக்கிரமே, விடுதலை செய்து விடுவார்கள். அதைப் பற்றி, உம்மிடம் பேசவே வந்தேன். நடந்தது என்னவோ நடந்து விட்டது. இனி நீர் குற்றவாளி என்று காட்டினாலும், அதனால் உமக்கு அந்த பாதகம் விட்டுப் போகப் போவதில்லை. நீர் எப்படியாவது, சர்க்காரிடம் ப்ரயத்தனப்பட்டு, அந்த மனிதன் மிகவும் நல்லவனாகித் திருந்தி விட்டான். இனி அவனை புது வருஷ நன்னாளில், விடுதலை செய்து விடலாம் என்று சிபார்சு செய்து, விடுதலை செய்து, மகனிடமே அனுப்பி விடும். அதுவே போதும். ஸ்ரீதரனை நான் பார்த்துப் பேச வேணும். அதற்கு சற்று அனுமதித்தால் எனக்கு நல்லதாகும்” என்று கேட்டேன்.
உடனே அந்த மனிதன், என்னை ஸ்ரீதரனிடம் அழைத்துச் சென்று, நான் தாராளமாகப் பேச விட்டார். கொலை நடந்த அன்றைய சம்பவத்தைப் பற்றிக் கேட்க வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஜெயிலரின் உதவியினால், ஸ்ரீதரனின் பிதாவையும் தனிமையில் பார்த்தேன். இதே மனிதரை ஆதியில் அவர் படாடோபமான உத்யோகத்தில் இருக்-
237
சாந்தியின் சிகரம்